சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் திடீரெனஇன்று காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு விரைந்த தீயணைப்பு காவல்துறையினர் தீயை அணைக்க மிகவும் முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர். இந்த தீ விபத்து மின் கசிவினால் ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் உள்ளே எத்தனை நோயாளிகள் உள்ளார்கள் என்பதும் இன்னும் கண்கூடாக தெரியவில்லை.

புகைமூட்டம் கீழ் தளத்தில் இருந்து மேலே செல்வதாகவும் கூறுகின்றனர். இந்த செய்தியை கேட்டு அங்கு விரைந்த அமைச்சர் மா சுப்பிரமணியம் மற்றும் மருத்துவத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நிலைமையை சரி செய்ய போராடி வருகின்றனர்.

இந்த தீ விபத்து ஆக்சிஜன் சிலிண்டர் இருக்கும் அறையிலிருந்து வெளி வந்திருக்கிறது என்றும் கூறப்படுகிறது. அதனால் இந்த தீ விபத்து மின் கசிவினால் ஏற்பட்டதா அல்லது ஆக்சிஜன் கசிவினால் ஏற்பட்ட தா என்பதை விசாரணை செய்து வருகின்றனர்.