தமிழகத்தில் கணிசமாக ஏறும் கொரோனா பாதிப்பு | லாக்டவுன் இருக்குமா ? | மா சுப்ரமணியன் என்ன சொல்கிறார் ?

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளதால் கட்டுப்பாடுகள் ஏதேனும் இருக்குமா என கேட்கப்பட்ட கேள்விக்கு மா சுப்பிரமணியன் பதிலளித்துள்ளார்.

இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்பு 13 ஆயிரத்தை தாண்டியது. இதையடுத்து இன்று 17 ஆயிரத்தை தொட்டுள்ளது, இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறிஇருக்கிறது. அதில் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 17,326 பேருக்கு கொரோன அதிகரித்துள்ளது என கூறியிருந்தனர். கடந்து 124 நாட்களுக்கு பிறகு தொற்று பாதிப்பு 15 ஆயிரத்தை கடந்தது இதுவே முதல் முறையாகும் என கூறியிருக்கின்றனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் 5 ஆயிரத்து 218 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது அங்கு பிப்ரவரி பதினோராம் தேதிக்குப் பிறகு தற்போது தான் தினசரி பாதிப்பு அதிகமாகியுள்ளது என கூறியுளனர்.

கேரளாவில் புதிதாக 3 ஆயிரத்து 890 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், இதையடுத்து டெல்லியில் 1934 பேரும், தமிழ்நாட்டில் புதியதாக ஆயிரத்து 63 பேரும், அரியானாவில் 872 பேரும், கர்நாடகாவில் 858 பேரும், மேற்கு வங்கத்தில் 745 பேரும், உத்தரப்பிரதேசத்தில் 634 பேரும், தெலுங்கானாவில் 497 பேரும், குஜராத்தில் 416 பேரும், இதுவரை பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை ஆகும்.

தற்போது இவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 27 லட்சத்து 49 ஆயிரத்து 56 ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் தான் தமிழ் நாட்டில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப் படுமா என்ற சந்தேகம் மக்களிடையே எழுந்துள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு மருத்துவ துறை அமைச்சர் திரு சுப்பிரமணியம் அவர்கள் கூறியது :- தோற்று அதிகரித்தாலும் தமிழ்நாட்டில் தற்போதைக்கு எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இல்லை. உயிர்சேதம் மிக குறைவாகவே இருப்பதால் தற்போது மக்கள் எச்சரிக்கையாக இருந்தால் மட்டுமே போதும் கட்டுப்பாடுகளையும் விதிக்க வேண்டிய அவசியமில்லை. குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்பும் போது தொற்று இருக்கிறதா என கண்காணிக்க வேண்டும். குழந்தைகளுக்கு சளி, காய்ச்சல், தொண்டை வலி போன்றவை தென்பட்டால் உடனே அருகிலிருக்கும் மருத்துவரை அனுகுவது நல்லது என கூறியிருக்கிறார்.

Recent Articles

spot_img

Related Stories

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay on op - Ge the daily news in your inbox