மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மனைவியும் மற்றும் இந்நாள் முதல்வர் ஸ்டாலின் அவர்களுடைய தாயாருமான தயாளு அம்மாள் அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தயாளு அம்மாள் உடல்நலக் குறைவு காரணமாக சில ஆண்டுகளாக கோபாலபுரம் இல்லத்தில் வசித்து வந்தார். கருணாநிதி அவர்கள் உடல் நலக் குறைவாக இருந்தபோது காவிரி மருத்துவமனையில் தயாளு அம்மாள் வீல்சேர் மூலமாகத்தான் வந்து சந்தித்தார், அப்போதிலிருந்தே அவர்களுக்கு உடல்நலக்குறைவு இருந்துவருகிறது.
அதனால் இவரை வெளியில் எங்கும் கூட்டிக் கொண்டு வராமல் வீட்டிலேயே வைத்து பத்திரமாக பார்த்துக் கொண்டு வருகின்றனர். ஸ்டாலின் அவர்களும் எங்காவது மாநாட்டுக்கு செல்லும் போது தயாளு அம்மா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டு தான் கிளம்புவார்.
இந்நிலையில் தற்போது தயாளு அம்மாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே 2018 ஆம் ஆண்டு தயாளு அம்மாளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு, அதனால் மருத்துவமனைக்கு சென்று வந்தது குறிப்பிடத்தக்கது.