சென்னையில் உள்ள கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டில் 17 வயது சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டில் 17 வயது சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. அதனால் அந்த சிறுமியின் கணவரை உடனே திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் துறையினர் விரைந்து வந்து கைது செய்தனர். இரு தினங்களுக்கு முன்பு கீழ்பாக்கம் பிரசவ வார்டில் பெண் ஒருவர் அழைத்துவரப்பட்டார். அவருக்கு பிரசவம் பார்த்த செவிலியர்களுக்கு அந்தப் பெண் மீது சற்று சந்தேகம் ஏற்பட்டது. ஏனென்றால் அவர் மிகவும் சிறிய வயதாக தென்படுகிறார் அதனால் இவருக்கு 18 வயது கடந்து விட்டதா என்ற ஒரு சந்தேகம் தான்.
அதன் பிறகு அந்தப் பெண்ணின் விவரங்களை சேகரித்து அப்போதுதான் தெரியவந்தது அந்தப் பெண்ணுக்கு வெறும் 17 வயது தான் ஆகிறது என்று. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உடனே காவல் துறையினருக்கு இது குறித்த தகவலை தெரிவித்தனர். தகவல் அறிந்து உடனே விரைந்து வந்த காவல்துறையினர் பிரசவ வார்டில் அனுமதிக்கப்பட்டு அந்தப் பெண் குறித்த தகவலை கேட்டறிந்தனர். அப்போது அந்த பெண்ணுக்கு 17 வயதுதான் என தெரிய வந்த பிறகு அந்தப் பெண்ணிடம் விசாரணை செய்ய முடியாமல் தவித்தனர்.
அதன் பின்பு குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகளுக்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது அந்த பாதுகாப்பு அதிகாரிகள் மருத்துவமனைக்கு உடனே விரைந்து வந்து அந்த சிறுமியிடம் லாவகமாக வினாக்களைக் கேட்டு விசாரணை நடத்தினர். செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் சேர்ந்த சதீஷ்குமார் என்பவருக்கும் தனக்கும் இருவீட்டார் முன்னிலையில் கடந்த ஆண்டு மே மாதம் 25ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இருவரும் முகப்பேரில் வாடகை வீட்டில் தங்கி வருகிறோம். அந்த சிறுமி தனது கணவர் சதீஷ்குமார் தற்போது அம்பத்தூரில் வேலைக்கு சென்று இருப்பதாகவும் அவரிடம் பல விஷயங்களை கரந்தனர்.

இது எதுவுமே தெரியாமல் தனது மனைவிக்கு குழந்தை பிறந்துள்ளது என சந்தோஷமாக சாக்லேட் வாங்கி வந்து சதீஷ்குமாரை உடனே காவல்துறையினர் மடக்கிப் பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். அப்போதுதான் தெரிந்தது 17 வயது சிறுமியை இவர் கல்யாணம் செய்து உள்ளார் என்று. ஆதார் அட்டையின் அடிப்படையில் சிறுமிக்கு திருமணத்தின்போது 16 வயது மட்டுமே ஆகியுள்ளது தற்போது குழந்தை பிறக்கும்போது 17 வயது என்பதையும் போலீசார் உறுதி செய்தனர். இதனடிப்படையில் சதீஷ்குமாரை கைது செய்ய சட்ட ஒப்புதலும் பெற்றனர். தொடர்ந்து குறிப்பிட்ட வயது பூர்த்தியாகாமல் மைனர் பெண்ணை திருமணம் செய்து கர்ப்பிணியாக்கிய குற்றத்திற்காக சதீஷ்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் திருவள்ளூர் நீதிமன்றத்தில் இவரை ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையிலும் அடைக்கப்பட்டார்.
