வைரமுத்து சம்பந்தப்பட்ட ஆடியோ என்னிடம் இருக்கிறது என மீண்டும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறார் சின்மயி
பிரபல தென்னிந்திய பாடகியான சின்மயி ஒரு சில வருடங்களுக்கு முன்பு பாடல் ஆசிரியர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை வைத்தார். அதாவது ஸ்விட்சர்லாந்தில் அவர் இவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் ஹோட்டலுக்கு அழைத்ததாகவும் அவர் கூறி இந்த குற்றச்சாட்டை அவர் மீது வைத்தார். இது அப்போது தமிழகம் எங்கும் பெரிய சர்ச்சையை கிளப்பியது, ஒரு சிலர் அவருக்கு ஆதரவாக இருந்தாலும் பெரும்பாலும் அவருக்கு எதிராக இருந்தனர். ஏன் இப்போது இதை சொல்கிறீர்கள் நடந்த அந்த நாள இதை சொல்லி இருக்கலாம் அல்லவா என்று அவரிடம் கேட்டனர்.
“ஆறுக்குட்டி போல இனி எந்த குட்டிகளும் எங்களிடமிருந்து செல்லாது” – EPS திட்டவட்டம்

அதற்கு அவர் அப்போது அரசியல் ரீதியாக செல்வாக்குடன் இருந்தார் அதனால் நான் அதை அப்போது சொல்லாமல் இப்போது சொல்கிறேன் என அதற்கு விளக்கம் அளித்தார். தற்போது மீண்டும் இது குறித்து சர்ச்சையை கிளப்பி இருக்கும் சின்மயி இயக்குனர்கள் சிலர் என்னை கூப்பிட்டு காம்ப்ரமைஸ் செய்து கொள்ளலாம் என பேசினார்கள். அந்த ஆடியோவை நான் வைத்திருக்கிறேன் நான் கொலை செய்யப்பட்டு விட்டால் அந்த ஆதாரங்கள் என்னுடைய நண்பர்கள் மூலமாக கிடைக்கும். அதனால் நான் அவர்களிடம் இதை பத்திரமாக வைக்க சொல்லி இருக்கிறேன்.
மேலும் ஒரு சில வீடியோக்களும் என்னிடம் உள்ளது, அதற்காக என்னுடைய மார்பகங்களை தொட்ட வீடியோக்கள் எல்லாம் என்னிடம் இல்லை நான் மட்டும்தான் வைரமுத்து மீது குற்றச்சாட்டு வைக்கிறேன் என்பது போல் பேசுகிறார்கள். அவரை வல்லவர் என்றும் நல்லவர் என்றும் கூறுகிறார்கள். ஆனால் என்னைப் போன்று 14 பெண்கள் அவர் மீது பாலியல் குற்றச்சாட்டை வைத்திருக்கின்றனர். அவர் நல்லவர் எல்லாம் கிடையாது ஒருவேளை இந்த சமயத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அம்மா இருந்திருந்தால் எனக்கு கண்டிப்பாக உதவி செய்திருப்பார்.

பலரும் என்னை அப்போதே கூற சொல்லி கேட்டனர் ஆனால் எனக்கு அப்போது அது தோன்றவில்லை என்னை அவர் தொடும் போது எனக்கு மிகவும் நெருடலாக இருந்தது. அப்போது எனக்கு என்ன நடக்கிறது என்று புரியவில்லை கீழே நான் ஓடி வந்து விட்டேன் என்னுடைய அம்மா கீழே இருக்கிறார் என்பதையும் அவர் அறிந்து இதை செய்திருக்கிறார். என்று கூறி ஒரு யூட்யூப் சேனலுக்கு இது குறித்து பதில் அளித்துள்ளார் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.