பாடகி சின்மயிக்கு ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் என இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. கன்னத்தில் முத்தமிட்டால் பாடல் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி, அவர்தன் இசைத் திறமையால் பல விருதுகளையும் வாங்கினார். மேலும் பல மொழிகளில் இவர் குரல் கொடுத்துள்ளார். இவரின் குரல் வளத்தால் 20 ஆண்டுகளாக தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் கலக்கி வருகிறார். மேலும் தமிழ் தெலுங்கில் பெரும்பாலான நடிகைகளுக்கு இவருடைய குரல் தான் ஒலிக்கும்.
இவர் 2014 ஆம் ஆண்டு நடிகர் ராகுலுடன் திருமணம் நடந்தது. அதன் பிறகு சந்தோஷமாக நடந்து வந்த இவர்களின் வாழ்க்கையில் தற்போது இரண்டு புதிய நபர்கள் சேர்ந்துள்ளனர். இந்த தம்பதிக்கு தற்போது ஒரு ஆண், ஒரு பெண் என இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. குழந்தைகளுக்கு திரிப்தா, சர்வாஸ் என பெயரிட்டுள்ளனர்.

என்னதான் இவர் வாழ்க்கை நல்லபடியாக சென்றாலும் நடுவில் மீடூ சர்ச்சையில் இவர் மிகப்பெரிய பிரபலமானார். அதாவது தன்னை பாலியல் ரீதியாக சீண்டினார் என பல குற்றச்சாட்டுகளை வைரமுத்துவின் மேல் வைத்தார் பாடகி சின்மயி. தொடர்ந்து இவர் மீது புகார்களை முன்வைத்து வந்தாலும் இதுவரை அவர் சட்ட ரீதியாக இது தொடர்பாக எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தற்போது பாடகி சின்மயியை வம்பு இழுக்கும் வகையில் ஒருவர் அவருக்கு பிறந்த குழந்தைகளின் போட்டோக்களை பதிவிட்டு இரண்டு குழந்தைகளையும் வைரம் மற்றும் முத்து போல பார்த்துக் கொள்ளுங்கள் என பாடலாசிரியர் வைரமுத்துவை நினைவு கூறுவது போல அந்த பதிவை அவர் பதிவிட்டிருக்கிறார். மேலும் அதில் அவர் சின்மயியையும் டேக் செய்திருக்கிறார்.
இதனைக் கண்டு ஆத்திரமடைந்த சின்மயி அவருக்கு ரிப்ளை செய்யும் வகையில் “உன்னையெல்லாம் பெத்தாங்க பாரு அவங்கள சொல்லனும்’ என கடுப்பாக பேசி அவரை ஆப் செய்துவிட்டார். தற்போது இவர் போட்ட இந்த பதிவு டுவிட்டரில் வைரலாக பரவி வருகிறது.
உன்னல்லாம் பெத்தாங்க பாரு அவங்கள சொல்லணும்.
— Chinmayi Sripaada (@Chinmayi) June 22, 2022