தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
இதை அடுத்து பொதுமக்களும் பல கட்சி அரசியல் தலைவர்களும் தங்களது ஆறுதல்களை தெரிவித்து மீண்டும் நலம் பெற்று வர வேண்டும் என தைரியம் அளித்து வருகின்றனர்.
இதுகுறித்து மு க ஸ்டாலின் அவர்களே தனது அதிகாரபூர்வமான ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார் அதாவது :- “இன்று உடல் சோர்வு சற்று இருந்தது பரிசோதித்ததில் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் நான் என்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளேன். அதனால் அனைவரும் முகம் கவசம் அணிவதோடு தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டு மிகவும் பாதுகாப்பாய் இருப்போம்” என பதிவிட்டிருந்தார்.

தற்போது இந்த பதிவிற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் முதலமைச்சர் மு க ஸ்டாலின் கொரோனா நோய் தொற்றிலிருந்து விரைந்து குணமாகி முழு உடல் நலத்தோடு பொதுப்பணிகளை தொடர வேண்டும் என அவருக்கு தைரியம் ஊட்டி உள்ளார். மேலும் பல திமுக நிர்வாகிகளும் தமிழக மக்களும் மு க ஸ்டாலின் விரைவில் குணமடைய வேண்டும் என இணையதளத்தில் கூறி வருகின்றனர்.
