புதுக்கோட்டை ஆட்சியர் கவிதா ராமு அவர்கள் முதல்வர் ஸ்டாலினுக்கு கிறிஸ்தவம் தொடர்பான புத்தகத்தை பரிசாக அளித்ததால் எழுந்த சர்ச்சையின் காரணமாக இந்து மதம் சார்ந்த புத்தகத்தை பாஜகவினரிடமிருந்து பரிசாகப் பெற்று கொண்டு அதை சரி செய்து கொண்டார். இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரிதும் பேசப்படுகிறது.
எப்போதுமே ஒரு ஆட்சியர் அல்லது அமைச்சர்கள் ஏதேனும் புத்தகங்களை பரிசாக கொடுக்க வேண்டும் என்றால் அவர்கள் அரசியல் சார்ந்த புத்தகத்தையோ அல்லது வேறு ஏதேனும் அறிவுள்ள புத்தகத்தையும் கொடுப்பார்கள். ஆனால் மதம் சார்ந்த ஒரு புத்தகத்தைக் கொடுத்து ஒரு புதிய விஷயத்தை புதுக்கோட்டை ஆட்சியர் கவிதா ராமு செய்திருக்கிறார்.
மேலும் அந்த ஆட்சியர் செய்த அந்த செயலுக்கு பாஜகவில் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்தது. அதற்காக அவர் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட ஒரு பதிவில் முதல்வருக்கு கிறிஸ்தவம் சார்ந்த புத்தகத்தை பரிசாக வழங்கியதற்கு பாஜக கடுமையான முறையில் அவரின் பதிவை விமர்சித்தது. இதனால் புதுக்கோட்டை மாவட்ட பாஜக எதிர்ப்பை கருத்தில் கொண்டு அந்த பேஸ்புக் பதிவை நீக்கினார் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு.

தற்போது அந்த புதுக்கோட்டை பாஜகவினர் பதிவிட்ட மற்றொரு பதிவில் “புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் தமிழக முதல்வருக்கு வழங்கிய அறியப்படாத கிறிஸ்துவம் என்னும் நூல் குறித்த மாவட்ட ஆட்சியரின் முகநூல் பதிவிற்கு நாங்கள் கண்டனங்களை தெரிவித்து இருந்தோம். அதனால் அவர் அந்த பதிவை நீக்கயும் இருந்தார் தற்போது புதுக்கோட்டை மாவட்ட பாஜக சார்பில் எழுத்து சித்தர் கண்ணதாசன் எழுதிய அர்த்தமுள்ள இந்துமதம் என்ற புத்தகத்தை வழங்கி நாங்கள் நன்றி தெரிவித்தோம்” எனக் கூறியுள்ளார்
