இலவச மருத்துவம் ! ஏழைகளுக்கு ஓடி ஓடி உதவி செய்யும் செந்திலின் மகன்… குவியும் பாராட்டுக்கள் !

காமெடி நடிகராக பலருக்கும் பரிச்சயமான நடிகர் செந்திலுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். அதில் மூத்த மகன் மணிகண்ட பிரபு தற்போது பல் மருத்துவராக இருக்கிறார்.அவரைப் போலவே அவருடைய மனைவியும் பல் மருத்துவர் இவர்கள் இருவரும் ஏழைகளுக்கு இலவசமாக மருத்துவம் பார்த்து வருகிறார்களாம்.அது குறித்த செய்திகள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரிட் நடிகர்களில் ஒருவர்தான் செந்தில். இப்போதும் எத்தனையோ காமெடி நடிகர்கள் புதியது புதியதாக நடிக்க தொடங்கி இருந்தாலும், கவுண்டமணி- செந்தில் காம்போ இப்போதும் பலராலும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆரம்ப காலகட்டத்தில் அதிகமான திரைப்படங்களில் நடித்து வந்த செந்தில் இப்போது ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

செந்தில் நடிகராக இருந்தாலும் அவர்கள் உடைய மகன் மருத்துவராக பலருக்கு பல உதவிகளை செய்து வருகிறார். அதே நேரத்தில் செந்தில் உடைய குடும்பத்தில் யாருமே படித்தவர்கள் கிடையாதாம். முதல் முறையாக டாக்டருக்கு படித்தது செந்திலுடைய மகன் தானாம். அவர் டாக்டருக்கு படித்துக் கொண்டிருக்கும் போது ஒரே ஒரு சினிமாவிலும் நடித்திருக்கிறார். ஆனால் அதற்குப் பிறகு எந்த சினிமாவிலும் அவர் நடிக்கவில்லையாம். தன்னுடைய படிப்பிலேயே முழு கவனத்தையும் செலுத்தி அடுத்தடுத்து அதில் வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கிறாராம்.

அப்போதுதான் ஜனனி என்ற பல் மருத்துவரை மணிகண்ட பிரபு காதலித்து இருக்கிறார். இவர்களுடைய காதலுக்கு இரண்டு வீட்டிலும் பெரிய அளவில் எதிர்ப்பு கிளம்பவில்லையாம். ஆனால் மணிகண்ட பிரபு நடிக்க கிளம்பியதும் ஜனனிக்கு பயம் வந்திருக்கிறது. ஏனென்றால் ஜனனியின் அப்பா ஜனனியை ஒரு டாக்டருக்கு தான் திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்று நினைத்து இருந்தாராம். ஆனால் பிறகு மணிகண்டன் டாக்டராகவே மாறியதும் இவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் திருமணம் முடிந்துள்ளது.

இந்த நிலையில் அப்பா ஆசைப்பட்டபடி நான் டாக்டராக மாறிவிட்டேன். அவர் ஆசைப்பட்ட மாதிரி பல ஏழைகளுக்கு என்னால் முடிந்த உதவிகளை நான் செய்து செய்து கொண்டிருக்கிறேன். அப்பா பல வருஷம் கழித்து இப்போது சினிமாவில் நடிக்க தொடங்கி இருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. அவர் அதே எனர்ஜியோடு தான் இப்போதும் இருக்கிறார் என்று நடிகர் செந்தில் மகன் அந்த பேட்டியில் பேசியிருக்கிறார். தற்போது நடிகர் செந்திலின் மகன் மணிகண்ட பிரபு மற்றும் அவருடைய மனைவி ஜனனிக்கு ரசிகர்கள் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.

Spread the love

Related Posts

“பெரியார் தமிழ் தேசியத்தின் தலைவர் இல்லை, அவரை நாங்கள் ஒரு போதும் தலைவராக ஏற்கமுடியாது” மீண்டும் சர்ச்சையை கிளப்பிய சீமான்

தந்தை பெரியார் தமிழ் தேசிய தலைவரும் அல்ல, எங்கள் எதிரியும் அல்ல அவர் எங்கள் வழிகாட்டி

உடைந்த பாஜக கூட்டணி? அதிருப்தியில் அண்ணாமலை, மெகா கூட்டணி எடப்பாடி எந்தக்கட்சிகளை குறிவைத்துளார் தெரியுமா ?

அமிட்ஷாவை சந்திக்கவேண்டிய அவசியம் இல்லை என்று அதிமுக தற்காலிக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசி இருப்பது

“இதுவரை நான் அப்படி ஒரு சத்தத்தை எந்த மைதானத்திலும் கேட்டதில்லை” – டோனிக்கு 2 சிசிக்சர்களை கொடுத்த மார்க் வுட் புகழாரம்

இதுவரை நான் அப்படி ஒரு சத்தத்தை எந்த மைதானத்திலும் கேட்டதில்லை என லக்னோ அணியின் வேகப்பந்து

Latest News

Big Stories