வடிவேலுவுடன் பல படங்களில் அவருக்கு இணையாக நடித்த காமெடி நடிகர் போண்டாமணிக்கு இதயத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளதால் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

சுந்தரா ட்ராவல்ஸ், வின்னர், திருமலை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து தமிழ்த் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை நடிகர் போண்டாமணி பிடித்துள்ளார். இவருக்கு இதயத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சென்னையில் உள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகர் சங்கத்தின் துணைத்தலைவர் பூச்சி முருகன் நடிகர் போண்டாமணிக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்கும் படி மருத்துவர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார். நடிகர் பலரும் தற்போது அவரின் உடல் நலம் குறித்து கேட்டறிந்து வருகின்றனர்.
