ராகுல் காந்தியின் பாரத யாத்திரைக்கு நன்கொடை வழங்குமாறு கூறி கடைக்காரர்களிடம் வாக்குவாதம் செய்த காங்கிரஸ் கட்சியினர்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் இந்திய ஒற்றுமை பயணமான பாரத் ஜோடோ யாத்திரையை செப்டம்பர் 7ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கினார். இந்த யாத்திரை சுமார் 150 நாட்களுக்கு நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் மட்டும் நான்கு நாட்களில் 59 கிலோமீட்டர் பயணத்தை முடித்த ராகுல் காந்தி தற்போது கேரளாவில் யாத்திரையை மேற்கொண்டு வருகிறார்.
Viral Video | சவுக்கு சங்கருக்கு ஆதராவாக களத்தில் இறங்கிய, ப்ளூ சட்டை மாறன் மற்றும் தடா ரஹீம்

இதை சாக்காக வைத்து அங்குள்ள காங்கிரஸ் கட்சியினர் ராகுல் காந்தியின் யாத்திரைக்கு நன்கொடை வழங்குமாறு ரூபாய் 2000 பணத்தை அங்குள்ள கடைக்காரர்களிடம் வசூலித்து வருகின்றனர். இதில் பாவாஸ் என்கிற ஒரு கடைக்காரர் என்னால் 500 ரூபாய் மட்டும் தான் தர முடியும் 2000 ரூபாய் இல்லை என கூறியிருக்கிறார். ஆனால் 2000 ரூபாய் தரவில்லை என்றால் யாரும் இங்கிருந்து உயிரோடு செல்ல முடியாது என கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதனால் பயந்து போன பாவாஸ் போலீசாருக்கு இது குறித்து தெரியப்படுத்தியுள்ளார். தற்போது இதனை அறிந்த கேரள மாநில காங்கிரஸ், சம்பந்தப்பட்ட அந்த நபர்களை உடனே கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டிருக்கின்றனர். மேலும் இதுபோன்ற விஷயம் மன்னிக்க முடியாதது கட்சியின் கொள்கை இது கிடையாது என இந்த நடவடிக்கையை கேரளா மாநில காங்கிரஸ் விடுத்துள்ளது.
