மணல்கயிறு பட பாணியில் ஒப்பந்தம் போட்டு நடந்த திருமணம் | அப்படி என்னென்ன ஒப்பந்தம் போட்டார்கள் ? | இணையத்தில் வைரலாகும் வீடியோ

திருமணத்தின் போது ஆண் பெண் இருவரும் சேர்ந்து திருமண கான்ட்ராக்ட் ஒன்றினை சைன் செய்து திருமணம் நடத்திய விஷயம் வீடியோவாக வெளிவந்து சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. திருமணத்திற்கு மிக முக்கியமானது ஜாதக பொருத்தம் தான். அப்படி ஜாதக பொருத்தம் சரியாக இருந்தால் கூட பெண் வீட்டார் மற்றும் ஆன் வீட்டாருக்கு சில குறைகள் இருக்கும். அதையெல்லாம் தாண்டி தான் இந்தியாவில் ஒரு திருமணம் என்பது நடைபெறும் இப்படித்தான் இருக்க வேண்டும் இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும் என ஒரு காண்ட்ராக்ட் போட்டு அதை கையில் பெறுவது எப்படி இருக்கும் ?

அதை தற்போது செய்து காட்டி இருக்கின்றனர் ஒரு தம்பதியினர். இன்ஸ்டாகிராமில் இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. அதில் மணமேடையில் அமர்ந்து கொண்டிருக்கும் மணமகள் மற்றும் மணமகன் ஒரு ஒப்பந்தத்தில் உள்ள நிபந்தனைகளை படித்துவிட்டு அதில் கையெழுத்து இடுகிறார்கள். அதில் இருக்கும் கண்டிஷன்கள் என்னவென்றால் :-

மனைவி எப்போதும் சேலை தான் கட்ட வேண்டும்
கணவருடன் மட்டுமே இரவு பார்ட்டிகளுக்கு செல்ல வேண்டும்
ஞாயிறு காலை உணவு கணவர்தான் செய்ய வேண்டும்
வீட்டு உணவுக்கு முக்கியத்துவம் கொடுத்து உண்ண வேண்டும்
மாதத்தில் பீட்சாவுக்கு ஒரு நாள் மட்டுமே அனுமதி
15 நாட்களுக்கு ஒரு முறை ஷாப்பிங் சொல்ல வேண்டும்
தினமும் ஜிம் செல்ல வேண்டும்
பார்ட்டிகளில் நல்ல புகைப்படங்கள் எடுக்க வேண்டும்

என இவ்வாறாக பல நிபந்தனைகள் அதில் அச்சடிக்கப்பட்டுள்ளது இதை பார்ப்பதற்கு தமிழில் முன்பு வெளிவந்திருந்த மணல் கயிறு படம் தான் ஞாபகத்தில் வருகிறது. அந்த படத்தில் கூட இப்படிப்பட்ட நிபந்தனைகளை வைத்து திருமணம் நடத்துவார்கள். இந்த வீடியோவை பலர் கண்டித்து வருகின்றனர். இன்னும் பெண்கள் சேலை தான் கட்ட வேண்டுமா இந்த ஆணாதிக்கம் எப்போது ஒழியும் என சில ட்விட்டர் வாசிகள் திட்டி வருகின்றனர்.

இந்த நிபந்தனைகளை கையெழுத்திட்டு முடித்த பின்பு மணமகன் அந்த பெண்ணின் காலில் விழுந்து வணங்குகிறார். இதை தற்போது எல்லோரும் பெருமையாக பேசி பாராட்டியும் வருகின்றனர். அதாவது ஒரு மனைவியின் காலில் விழ எந்த ஒரு ஆணும் அசிங்கம் அவமானம் என்று கருதி விடுவார்கள். ஆனால் தாலி கட்டிய பின்னர் காலில் விழுவதை இந்த பழமை வாதிகள் இதை கற்றுக் கொள்ள வேண்டும் என கூறி வருகின்றனர்.

Spread the love

Related Posts

புருஷனுக்கு டாடா சொல்லிவிட்டு புருஷனின் நண்பனுடன் உல்லாசம், கடைசியில் பிரிய மனமில்லாமல் இவர்கள் செய்த காரியம் என்ன ?

தர்மபுரி மாவட்டத்தில் கணவனின் நண்பனுடன் கள்ளக்காதல் வைத்துக்கொண்ட ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த

“அடுத்து எப்போ சார் ரெய்டுக்கு வருவீங்கன்னு என்னோட பொண்ணு கேஷுவலாக கேட்டால்” – ரெய்டு குறித்து நையாண்டியாக பதிலளித்த விஜயபாஸ்கர்

அரசுக்கு எவ்வளவு வேலை இருக்கும் நேரத்தில் ஒரு தனிநபர் மீது உள்ள அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக

கையை விரித்த நெட்பிலிஸ் | சரியான நேரத்தில் திருமண விடியோவை ஒளிபரப்பாததால் கடுப்பான நயன்தாரா | 25 கோடி நஷ்டமா ?

தமிழ் சினிமாவில் ட்ரெண்டிங் couples ஆக இருப்பவர்கள் தான் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இவர்கள்