முடிவு எடுத்தால் முதல்வர் என விஜய் ரசிகர்கள் விஜய்க்கு போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர்.
அந்த போஸ்டரில் 2021 தளபதி ஸ்டாலின் ஆட்சி 2026 இல் தளபதி விஜய் ஆட்சி என்று அச்சடிக்கப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு விஜய் ஐதராபாத்துக்கு சென்று அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரை சந்தித்துள்ளார். அதில் விஜய் மக்கள் இயக்கம் தொடங்குவது தொடர்பான விஷயங்களில் கேட்டறிந்தார். இதனால் விஜய் அவர்களும் அரசியலுக்கு வந்து விடுவார் என ஒரு புறம் கூற. இப்போது அதிமுக வுக்கு பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது அதை சரி கட்டவும் ஓட்டை பிரிக்கவும் திமுக, விஜய் மக்கள் இயக்கத்தை திமுக பி டீமாக செயல்படுத்த முயற்சிக்கிறது, என்று பாமக ஆலோசகர்களும் மறுபுறம் கூறி வருகின்றனர்.
இப்போது முடிவு எடுத்தால் முதல்வர்தான் என நடிகர் விஜய்யை அரசியலுக்கு இழுக்கும் வகையில் அவரது ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர். 2026 தளபதி விஜய் தலைமையில் ஆட்சி நடக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளனர். இதில் முதல்வர் ஸ்டாலின் தளபதி என போஸ்டர் அச்சடிக்கப்பட்டது. இதனால் திமுகவை சீண்டும் வகையில் இது உள்ளது என திமுக நிர்வாகிகள் பலரும் இதை விமர்சித்து வருகின்றனர்.
தற்போது இது சமூக வலைதளத்தினரிடையே பேசு பொருளாக மாறியுள்ளது.