“டேய் கூலு … இங்க வாடா… அப்டினு கூப்டனும்” டீ ராஜேந்தர் நிலமை குறித்து மனமுடைந்து போன கூல் சுரேஷ் | கோவிலில் பிரார்த்தனை

இயக்குனர் நடிகர் மற்றும் இசை அமைப்பாளருமான பன்முகத் திறமை கொண்ட நடிகர் டி ராஜேந்தர்க்கு திடீரென நேற்று நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர் இந்த சம்பவம் நேற்று முழுவதும் இணையதளத்தில் பரபரப்பாக காணப்பட்டது

டி ராஜேந்தர், அவரைப் பிடிக்காத ஆட்களே இருக்க முடியாது. அந்த காலகட்டங்களில் இயக்கம் தொடங்கி இசை, வசனம், பாடல் வரிகள் என எல்லாவற்றையும் ஒரே ஆளாக சுமந்து அதை நன்றாகவும் செய்து வந்தவர். அப்படிப்பட்ட ஒரு நபருக்கு திடீரென்று இந்த நெஞ்சு வலி ஏற்பட்டதால் அவரின் ரசிகர்களும், சிம்புவின் ரசிகர்களும் பதட்டம் அடைந்தனர்.

இந்த நிலையில் தமிழ் சினிமா காமெடி நடிகரும் மற்றும் சிம்புவின் தீவிர ரசிகரான கூல் சுரேஷ் அவர்கள் திருவண்ணாமலை கோயிலில் அங்கப்பிரதட்சணம் செய்து எலுமிச்சையில் நெய்விளக்கு ஏற்றி டி ராஜேந்தர் மீண்டும் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று சிறப்பு வழிபாடுகளை செய்தார். அந்த வீடியோ போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

சிம்பு எனக்கு லவ் டார்ச்சர் தராரு … | ஆதாரத்துடன் வெளியிட்ட சீரியல் நடிகை

மேலும் அவர் வீடியோவில் பேசியது என்னவென்றால் :- “அவர் (டி ராஜேந்தர்) மீண்டும் குணமடைந்து எங்களைப் பார்க்க வர வேண்டும். பழையபடி டேய் cooluu இங்க வாடா என்று அந்த எனர்ஜியில் என்னை கூப்பிட வேண்டும். நான் எப்போதுமே எனர்ஜியாக பேசக்கூடிய ஆல். ஆனால் தற்போது என்னால் எனர்ஜியாக பேச முடியவில்லை. ஏனென்றால் உங்களைப் பற்றி கவலை எனக்கு அதிகம் இருக்கிறது. அதனால் நீங்கள் சீக்கிரம் குணமாக வேண்டும். எங்களின் பிரார்த்தனை உங்களுக்கு எப்போதுமே இருக்கும் என அந்த வீடியோவில் கோயிலில் நின்றபடி அவர் பேசினார்..

Spread the love

Related Posts

நிதி to IT ! PTR போட்ட பரபர ட்வீட் ! என்ன சொல்லியிருக்கார் தெரியுமா ?

தமிழ்நாட்டின் முதல்வராக முக ஸ்டாலின் தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்து 3வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும்

முடிந்தால் மதுரை ஆதீனம் மீது கை வைத்துப் பாருங்கள் என திமுகவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் அண்ணாமலை.

இதற்கு முன்பு திமுகவுக்கும் பாஜகவுக்கும் கடந்த ஒரு ஆண்டு கடும் மோதல் போக்கு ஏற்பட்டது. திமுக

சோபாவில் அமர்ந்து கவர்ச்சி விருந்தளித்த ஜான்வி கபூர் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

மாடர்ன் உடையில் செக்ஸியான போஸ் கொடுத்து அசத்தும் பழம்பெரும் நடிகை ஶ்ரீதேவியின் மகளான பாலிவுட் நடிகை

Latest News

Big Stories