எப்போதுமே எந்த படம் வெளி வந்தாலும் அந்த படத்தின் திரையரங்குக்கு சென்று படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்து யூடியூபர்களுக்கு ரெவியூ கொடுக்கும் வழக்கம் வைத்திருப்பவர் கூல் சுரேஷ்.
நேற்று அவருடைய படமான மைடியர் லிசா படத்திற்கு அவர் வரவில்லை என்று இயக்குனரும் தயாரிப்பாளர்களும் கண்டனம் தெரிவித்தனர். இதனால் ஒரு வீடியோவை வெளியிட்ட அவர் ரசிகர்கள் அனைவரும் என்னை மன்னித்து விடுங்கள். youtubers என்னை முக்கியமாக மன்னித்து விடுங்கள் மற்ற படங்களுக்கெல்லாம் நான் ரிவ்யூ செய்வேன் ஆனால் என்னுடைய படம் மை டியர் லிசா இன்று வெளியாகி இருக்கிறது.

என்னால் வர முடியவில்லை ஏனென்றால் நான் வெளி மாநிலத்தில் இருக்கிறேன். நானும் இந்த படத்தை பார்த்து விட்டேன். முக்கியமாக என்னுடைய கதாபாத்திரத்தை கண்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன். கண்டிப்பாக இந்த படம் ஒரு வெற்றி படமாக அமையும். மேலும் நேற்று படத்தை வெளியிட்ட இயக்குனர்களுக்கு நான் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். பழையபடி நான் படம் பார்க் வருவேன்.
திருமணத்துக்கு ஒகே சொன்ன கீர்த்தி சுரேஷ் !…. | விரைவில் திருமண ஏற்பாடு | மாப்பிள்ளை …..
மேலும் முக்கியமாக ஒரு விஷயத்தை கூறுகிறேன் இந்த படத்தில் நடித்த கலைஞர்கள் அனைவரும் படத்தை நிச்சயமாக காசு கொடுத்து தியேட்டரில் பார்க்க வேண்டும். யாராவது ஓசியில் பிரிவியூ ஷோ போடுவார்கள் அதை பார்த்துக் கொள்ளலாம் என்று இருக்க வேண்டாம். நீங்கள் நடித்த படத்தை நீங்கள் தான் சப்போர்ட் செய்ய வேண்டும். அதனால் படத்தை பார்த்து அதை வீடியோவாக வெளியிடு வையுங்கள். படத்தில் நடித்தவர் யார் யார் என்று எனக்கு தெரியும். நீங்கள் வீடியோ போடவில்லை என்றால் என்ன நடக்கும் என்று அதன் பிறகு நான் பார்த்துக்கொள்கிறேன் என்று மிகவும் ஆவேசமாக பேசி அந்த வீடியோவை முடித்துள்ளார் கூல் சுரேஷ்.
