“விக்ரமின் கோப்ரா படம் வெளியிட தடை” – அதிரடி உத்தரவை போட்ட சென்னை உயர்நிதிமன்றம்

நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியாகியுள்ள கோப்ரா படம் திருட்டுத்தனமாக வெப்சைட்டுகளில் வெளியாக தடை விதித்திருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்.

லலித் குமார் தயாரிப்பில் நடிகர் விக்ரம், கிரிக்கெட் வீரர் இர்பான் பத்தான், ரோஷன் மேத்யூ மற்றும் நடிகை ஸ்ரீநிதி போன்றவர்கள் நடித்து வருகிற புதன்கிழமை விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம் தான் கோப்ரா இந்த படத்தில் பல உச்ச நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். மேலும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு டிமான்டி காலனி மற்றும் இமைக்கா நொடிகளை படங்களை எடுத்த இயக்குனர் அஜய்ஞயானமுத்து இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் விக்ரம் 9 கெட்டப்புகளில் வர உள்ளதாக படக்குழு ட்ரைலர் மூலம் அறிவித்தது அதற்காகவே இந்த படத்திற்கு ஏகோபித்த வரவேற்பு அளிக்க ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

சீயான் விக்ரம் பல நாட்கள் கழித்து ஒரே படத்தில் பல வேடங்களில் நடிக்க உள்ளார். அதனாலேயே இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு எதிரி உள்ளது. மேலும் இந்த படத்தை அரசு மற்றும் தனியாரின் 29 இணையதள சேவை நிறுவனங்கள் மூலம் சட்டவிரோதமாக 1788 இணையதளங்களில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது.

“ஆறுக்குட்டி போல இனி எந்த குட்டிகளும் எங்களிடமிருந்து செல்லாது” – EPS திட்டவட்டம்

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்த போது வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன் ஆஜராகி பல மாதங்கள் உழைப்பில் மிகுந்த பொருட்செலவில் பல போராட்டங்களுக்கு நடுவில் உருவான இந்த படத்தை திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதை கேட்ட நீதிபதியும் அப்படி இது நடந்தால் இது பெருத்த நஷ்டம் ஏற்படும் என்றும் திரை கலைஞர்களின் வாழ்க்கையே இதனால் பாதிக்கப்படும் என்பதை கருத்தில் கொண்டு இந்த படத்தை சத்தவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதிக்க வேண்டும் எனவும் இணையதள சேவை நிறுவனங்கள் இதை தடுக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Spread the love

Related Posts

கல்யாணம் முடித்த கையோட வேலையை துவங்கிய நயன்தாரா | அப்செட்டில் இருக்கும் விக்னேஷ் சிவன்

கோலிவுட் வட்டாரத்தில் புதுமண தம்பதிகளாக வலம் வரும் ஜோடிகள் தான் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா.

ITI படித்து தேர்ச்சி பெற்றால் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு படித்து முடித்தது போல் சான்றிதழ் பெறலாம் | தமிழக அரசு அரசாணை வெளியீடு

ஐடிஐ தேர்ச்சி பெற்றிருந்தால் பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பிற்கு இணையான சான்றிதழ் வழங்கப்படும் என சட்டப்பேரவையில்

சன் டிவிக்கு பெரிய ஆப்பு | பங்குசந்தையில் வரலாறு காணாத மிகப்பெரிய சரிவு | எப்படி எதிர்கொள்ள போகிறது சன் நெட்ஒர்க் ?

மும்பை பங்குச் சந்தையில் சன்டிவியின் பங்குகள் மதிப்பு கடந்த 52 வாரங்களில் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய