ஜூலை 11ம் தேதி எடப்பாடி பழனிசாமி நடத்திய பொதுக்குழு செல்லாது என உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவை தந்துள்ளது
அதிமுகவில் ஜூன் 23 அன்று எந்த நிலையில் இருந்ததோ அந்த நிலையை தான் தொடரும் எனவும், எடப்பாடி பழனிச்சாமியும், ஓ பன்னீர்செல்வம் சேர்ந்து தான் கூட்டத்தை கூட்ட முடியும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் தற்போது பரபரப்பான உத்தரவை அளித்துள்ளது.

இதனால் தற்போது அதிமுக தலைமை சற்று ஆட்டம் கண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் எடப்பாடி பழனிச்சாமி உடனே அது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெறும் எனவும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அறிவித்திருக்கிறார்.
இதைதொடர்ந்து தற்போது ஓ பன்னீர்செல்வம் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சமாதிக்கு செல்ல இருக்கிறார்.
