ஐபிஎல் போட்டி கோலாகலமாக மும்பையில் வருகிற 26-ஆம் தேதி சனிக்கிழமை தொடங்க உள்ளது. இதில் முதல் போட்டியில் சிஎஸ்கே அணியும் கேகேஆர் அணியும் மோத உள்ளது.
இந்தப் போட்டி தொடங்க இன்னும் 48 மணி நேரமே உள்ள நிலையில் இப்போது ஒரு அதிர்ச்சி தகவல் சிஎஸ்கே அணியினரிடமிருந்து வெளியே வந்துள்ளது. இதைக்கேட்டத்திலிருந்து சிஎஸ்கே ரசிகர்கள் மற்றும் தோனி ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். அதாவது சிஎஸ்கே அணிக்கு இனிமேல் கேப்டன் ரவீந்திர ஜடேஜா தான் தோனி கேப்டன் இல்லை என்று அதிகாரபூர்வமான அறிவிப்பு வந்துள்ளது. இந்த செய்தியை கேட்டதிலிருந்து மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர் தோனியின் ரசிகர்கள்.
இருந்தாலும் எங்கள் கேப்டன் தேர்வு செய்த ரவீந்திர ஜடேஜாவை நாங்கள் ஆமோதிப்போம் அதனால் எங்களுடைய முழு ஆதரவும் ஜடேஜாவுக்கு இருக்கும் என்று ஒருபுறம் மனசை ஆறுதல் படுத்தி வருகின்றனர். என்னதான் தோனி கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினாலும் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டிகளில் அவர் சிஎஸ்கே அணிக்காகவே விளையாடுவார் என்றும் அணியின் நிர்வாகம் உறுதி செய்துள்ளது.

ஐபிஎல் வரலாற்றில் நான்கு கோப்பைகளை அள்ளி இரண்டாவது பெரிய கேப்டனாக வலம் வந்த டோனியின் இந்த திடீர் முடிவு தோனி ரசிகர்கள் அல்லாத மற்ற ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
