ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் இன்று கோலாகலமாக மும்பையில் தொடங்குகிறது. இதில் முதல் ஆட்டத்தில் சென்னை மற்றும் கொல்கத்தா அணி மோதுகிறது. நேற்றுதான் சென்னை அணியிடம் இருந்து ஒரு முக்கிய அறிவிப்பு வெளிவந்தது. அதாவது சென்னை அணிக்கு இனிமேல் ஜடேஜா தான் புதிய கேப்டன் தோனி கேப்டன் பதவியிலிருந்து விலகுகிறார் என்ற செய்திதான் அது. இதை கேட்டதில் இருந்து ரசிகர்கள் மிகவும் சோகத்தில் உள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும்.
இத்தனை வருடம் சிஎஸ்கே வில் இருந்து நான்கு முறை கப் அடித்து கொடுத்து விட்டு. சென்ற அந்த தோனியை இன்னும் யாரும் மறக்கவில்லை. அதனால் அவரின் இழப்பு சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஒரு பெரும் இழப்பாக தான் இருக்கும். இருந்தாலும் மாற்றம் வந்து கொண்டே தான் இருக்கும் அதை நாம் ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும். அதேபோல் கேகேஆர் அணிக்கும் மோர்கன் இடம் பெறாததால் அந்த அணிக்கு புதிய கேப்டனாக ஸ்ரேயாஸ் இயரை கேகேஆர் தேர்வு செய்துள்ளது.
இப்போது இரண்டு அணிகளுக்கும் புதிய கேப்டன் இந்த சீசனில் இருந்து ஆட தொடங்க உள்ளனர். அதனால் இதில் எந்த கேப்டன் சிறந்த செயல்படுவார் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே அதிகமாக உள்ளது. என்று சொல்லவேண்டும். சிஎஸ்கேவுக்கு எப்படி ரசிகர்கள் இருக்கிறார்களோ அதேபோல் சற்று குறைவாக கேகேஆர்க்கும் பல ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அவர்களின் சொந்த மைதானமான ஈடன் கார்டன் மைதானத்தில் போட்டி நடந்தால் ஒரு சேர் கூட மிச்சம் இருக்காது எல்லாம் புக் செய்யப்படும். இத்தனைக்கும் இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய ஆடுகளும் அதுதான். அந்த அளவிற்கு ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கக்கூடிய அணிதான் கேகேஆர்.

இப்போது இந்த இரண்டு அணியில் எந்த அணி இன்று நடக்கவிருக்கும் போட்டியில் வெல்ல அதிகம் வாய்ப்புள்ளது என்று பார்க்கும் போது, இரு அணிகளும் தங்களது வீரர்களை ஓரளவுக்கு சிறந்த வீரர்களாக தான் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே இன்றைய ஆட்டம் இரு அணிகளும் சம பலத்துடன் மோதுவதால் இதில் எந்த அணி வெற்றி பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் அந்த அளவிற்கு இரண்டு அணிகளும் பலம் வாய்ந்த அணிகள் தான். கொல்கத்தாவிடம் ஒப்பிடும் போது ஆண்ட்ரே ரசல், சுனில் நரின் போன்ற அதிடரை ஆட்டக்காரர்கள் இங்கே இருக்கும் பட்சத்தில் சென்னை அணிக்கு அது கிடையாது என்பதால் கொல்கத்தாவின் கையே சற்று ஓங்கி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் ஆட்டத்தை நாம் முழுமையாக பார்த்தால் தான் உண்மையான வெற்றியாளர் யார் என்று தெரியும்.

Dream 11 Prediction
Sam Billings, Shreyas Iyer, Nithish Rana, Gaikwad, Jadeja, Narine, Russell, V.Iyer, Adam Milne, S.Mavi, R.Hangargekar
குறிப்பு :- இந்த அணி டாஸ்க்கு பிறகு மாறலாம், அதனால் அதையும் மனதில் வைத்து கொள்ளுங்கள்