பாட்டுப்பாடி பிச்சை எடுக்கும் சினிமா நடிகர் | தமிழ் சினிமாவின் நிலை இது தான ?

குக்கூ படத்தில் நடித்த நடிகர் பிளாட்பாரத்தில் பாட்டுப்பாடி பிச்சை எடுக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.

2014 ஆம் ஆண்டு ராஜுமுருகன் இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ் மற்றும் மாளவிகா போன்றோர்கள் நடித்து வெளியான படம் தான் குக்கூ. இந்த படம் நல்ல விமர்சனங்களை பெற்று வசூல் ரீதியாகவும் ஓரளவுக்கு ஜொலித்தது. இந்த படத்தில் அவர்களுடன் நடித்த சக நடிகர்கள் சிலர் உண்மையாகவே கண் பார்வையற்றோர் களாக இருந்தார்கள். அந்த சமயத்தில் இந்த படத்தில் நடித்த நடிகர்களின் தேர்வு பற்றியும் அவர்களின் நடிப்பைப் பற்றியும் பெருமையாக பேசப்பட்டது.

இந்த நிலையில் அந்தப் படத்தில் அட்டகத்தி தினேஷ் அவர்களுக்கு நண்பனாக வருபவர்தான் இளங்கோ. இவர் இப்போது பல்லாவரம் சுரங்கப் பாதையில் அமர்ந்து பாட்டு பாடி பிச்சை எடுத்துக் கொண்டு வருகிறார் என்ற அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.

ஒரு யூடியூப் சேனல் ஒன்றில் பேசிய இளங்கோவன் “நான் இந்த சுரங்கப் பாதையில் தான் பிச்சை எடுத்து வருகிறேன் 2019 ஆம் ஆண்டிலிருந்து நான் இங்கே தான் இருக்கிறேன் எனது வீட்டிலிருந்து வேலை இல்லை என்ற ஒரே காரணத்திற்காக என்னை துரத்தி விட்டனர். அதனால் நான் சென்னைக்கு வந்து இங்கு ஒரு வீடு எடுத்து தங்கியிருந்தேன்.

கொரோனா காலத்தில் வேலை எதுவும் இல்லாமல் வாடகை வீட்டிற்கு காசு கொடுக்க முடியாததால், என்னை வீட்டை விட்டு துரத்தி விட்டனர். அதனால் இங்கே சுரங்கப்பாதையில் உட்கார்ந்து பாட்டு பாடி பிச்சை எடுத்து அதில் வரும் காசை வைத்து வாழ்ந்து வருகிறேன். என்னை கண் இல்லாததால் பலரும் கேலி செய்தனர் ஆனால் அவற்றைப் பற்றி எல்லாம் எனக்கு கவலை இல்லை. எனக்கு ஒரு வீடு வேண்டும் மற்றும் பாடுவதற்கு ஒரு வாய்ப்பு வேண்டும், எனக்கு பாடகராக வேண்டுமென்பது ஆசை” என்றார் அவர்.

Spread the love

Related Posts

பிராமின் தட்டு இட்லி, பிராமின் காபி …. ஸ்விக்கி, ஸ்மட்டோ போன்ற ஆன்லைன் Food டெலிவரி கடைகளில் சாதி பெயர்… நெட்டிஸன்கள் கண்டனம்

ஸ்விக்கி மற்றும் ஜொமேட்டோ போன்ற ஆன்லைன் food டெலிவரி செய்யும் செயலிகளில் சாதி பெயரை குறிப்பிட்டு

பாலியல் தொழிலும் ஒரு தொழில் தான் அதனால் அவர்களை துன்புறுத்த கூடாது | நீதிமன்றம் அதிரடி அறிவிப்பு

பாலியல் தொழிலும் ஒரு தொழில்முறை தான் அதற்குண்டான வயது வந்தவர்கள் அவர்களின் விருப்பத்தின் பேரில் அந்த

Viral Video | இந்திய மாணவர்களை தாக்கும் உக்ரைன் ராணுவம் | இந்தியர்களை காப்பாற்ற மத்திய அமைச்சர்கள் உக்ரைன் பயணம்

உக்ரைன் நாட்டில் கடந்த 5 நாட்களாக ரஷ்யப் படைகள் தாக்கி வருகின்றன. இதனால் அங்கு இருக்கும்