நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம்தான் பீஸ்ட் இந்த படத்தில் தளபதி விஜய் மற்றும் பூஜா ஆகியோர் நடிக்கின்றனர். தற்போது இந்த படத்தின் பாடல் ஒன்று சமீபத்தில் வெளியாகி வைரல் ஹிட் ஆனது. அரபிக் குத்து என்று வித்தியாசமாக பெயரிடப்பட்ட அந்த பாடல் 150 மில்லியன் வியூஸ்களை தாண்டி சாதனை படைத்துள்ளது.
அழுது கொண்டிருக்கும் ஒரு குழந்தை அந்த அரபி குத்து பாடலை கேட்டவுடன் அந்த பாடலையே வியந்து பார்த்து அழுகையை நிறுத்துகிறது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
தளபதி விஜய் அவர்கள் என்றுமே குழந்தைகளுக்கு பிடித்தமான ஒரு நடிகர் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தான் அதற்கு இந்த வீடியோ ஒரு சான்று என்றே சொல்லலாம். என்னதான் தளபதியை புகழ்ந்தாலும் இந்தப் பாடலை இசையமைத்த இசையமைப்பாளர் அனிருத்துக்கும் இந்தப் பெருமை சேரும் என்பது குறிப்பிடத்தக்கது.