குக் வித் கோமாளி புகழ் அவர்கள் என்னை வைத்து சில நிறுவனங்கள் காசு சம்பாதிக்கிறார்கள் நான் வராத இடத்துக்கெல்லாம் நான் வருகிறேன் என்று மக்களை ஏமாற்றுகின்றனர் என்று பிலிப்பைன்ஸில் இருந்து ஒரு வீடியோவை பதிவிட்டிருக்கிறார்
அதில் அவர் கூறியது என்னவென்றால் :- “நான் ஈரோடு வருகிறேன் மதுரை வருகிறேன் என்று பல பேர் என்னுடைய பெயரில் சில குழுக்களிடம் பணங்களை வாங்குகின்றனர். எனக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நான் எந்த நிகழ்ச்சிக்கும் தற்போது வரவில்லை. அதனால் என் பெயரை வைத்து யாராவது ஏமாற்றினால் கவனமாக இருங்கள்.


அதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை நான் இப்போது பிலிப்பைன்சில் இருக்கிறேன். அது உங்கள் எல்லாருக்கும் தெரியும். அப்படி இருக்கும் போது நான் எப்படி அந்த நிகழ்ச்சிகளுக்கு எல்லாம் வர முடியும் ? அதனால் என் பெயரை வெற்றி பணம் பறிக்கும் கும்பலிடம் கவனமாக இருங்கள்” என அவரது ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். தற்போது இந்த வீடியோவினை குக் வித் கோமாளி ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.

