குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் இன்று இறுதி நாளுக்கான நிகழ்ச்சி நடந்து முடிவடைந்து இருக்கிறது. அதில் டைட்டில் வின்னர் ஆக மைம் கோபி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அதே நேரத்தில் அவருக்கான பரிசுத்தொகை பற்றிய விவரங்களும் தற்போது வெளியாகி இருக்கிறது.

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அடுத்ததாக ரியாலிட்டி ஷோக்களில் அதிகமான ரசிகர்களின் நன்மதிப்பை பெற்ற ரியாலிட்டி ஷோவாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருந்து வருகிறது. ஆரம்பத்தில் இருந்தே இந்த நிகழ்ச்சிக்கு கிடைத்த வரவேற்பு காரணமாகத்தான் தற்போது நான்காவது சீசன் வரைக்கும் இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக வந்திருக்கிறது.

எப்போதும் காமெடிக்கு அதிகமா வரவேற்பு இருக்க தான் செய்கிறது. அந்த மாதிரி தான் டைமிங் காமெடி ஆக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளிகள் செய்யும் சேட்டைகள் ரசிகர்களால் தொடர்ச்சியாக ரசிக்கப்பட்டு வருவதால் தான் அதிகமான டிஆர்பியும் கிடைத்துக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் பைனல் நிகழ்ச்சி எப்போது ஒளிபரப்பாகும் யார் டைட்டில் வின்னர் ஆக வருவார்கள் என்று எதிர்பார்ப்பு அதிகமாக இருந்த நிலையில், அதில் டைட்டில் வின்னராக மைம் கோபி வெற்றி பெற்றிருக்கிறார்.அவரைத் தொடர்ந்து இரண்டாவது இடம் ஸ்ருஷ்டிக்கும் மூன்றாவது இடம் விசித்திராவிற்கும் கிடைத்து இருக்கிறது.
3 சென்ட் நிலம் வாங்கி தரேன் ! வீடு கட்ட ..பாஜக நிர்வாகியை ஸ்தம்பிக்க வைத்த அண்ணாமலை !
அதுபோல குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவருக்கு 5 லட்சம் ரூபாய் பரிசு என்றும், இரண்டாவது இடத்தில் வெற்றி பெற்றவருக்கு 3 லட்சம் ரூபாய் பரிசு என்றும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் வெற்றி பெற்ற கோப்பை மற்றும் பதக்கங்களோடு மைம் கோபி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,” ஜெயிச்சிட்டோம் தம்பிகளா, சப்போர்ட் பண்ண எல்லோருக்கும் நன்றிகள்” என்று புகைப்படம் வெளியிட்டு கேப்ஷன் கொடுத்திருக்கிறார்.
