அருள்நிதி, அவந்திகா எரும சாணி விஜய் நடிப்பில் அவரே இயக்கி இன்று திரையரங்கில் வெளி வந்திருக்கும் படம் தான் டி பிளாக் அந்த படத்தின் விமர்சனத்தை தான் தற்போது பார்க்க உள்ளோம்.
காட்டுக்கு நடுவில் கட்டப்படும் ஒரு என்ஜினீரிங் கல்லூரி. அந்த கல்லூரியில் உள்ள பெண்கள் விடுதியில் அடிக்கடி நடக்கும் கொலைகள். இதற்கெல்லாம் காரணம் ஒரு சைக்கோ கொலைகாரனா அல்லது பேயா ? என்ற கோணத்தில் நகர்கிறது கதை.
அவரவர்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் எல்லோரும் நேர்த்தியாக நடித்தனர். படத்தில் இன்னொரு பிளஸ் பாயிண்ட் என்று சொன்னால் கேமரா ஒர்க் நிச்சயமாக சொல்லலாம். அதை தவிர்த்து படத்தில் வேறு எந்த பாசிட்டிவும் இல்லை. அதற்குக் காரணம் வழுவில்லாதா திரைக்கதை தான். படத்தின் முதல் பாதியில் வரும் காமெடி காட்சிகள் எதுவும் சரியாக ஒர்க் ஆகாவில்லை படத்தை இழுக்கு தேவையில்லாத காட்சிகளை படத்தில் வைத்தது போல் தோன்ற வைக்கிறது. பழைய ஊசிப்போன என்ஜினீரிங் கல்லூரி காமெடிகளை இதிலும் வைத்திருக்கின்றனர். என்ஜினீரிங் கல்லூரியில் படிக்கவரும் மாணவர்கள் எல்லாம் பெண்களை சைட் அடிக்கத்தான் வருகிறார்கள் என்பது போல சித்தரிக்கும் காட்சிகள் எல்லாம் பார்த்து பார்த்து சலித்து போன காட்சிகள்.

இரண்டாம் பாதி திரைக்கதை மிகவும் நீளம் நம் அமைதியை சோதிக்கும் அளவிற்கு இருக்கும். எருமசானி விஜய் மக்களிடத்தில் மிகவும் பிரபலமான ஒரு youtuber அவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அப்படி அவர்கள் எதிர்பார்த்து படைப்பை எப்படி எடுக்க வேண்டும் என்று இருக்கிறது அல்லவா ? அதை அவர் பூர்த்தி செய்யவில்லை. அடுத்து இதுதான் நடக்கப் போகிறது என்று யூகிக்க கூடிய அளவிற்கு திரைக்கதை. மேலும் பல இடங்களில் வெறுப்பேற்றும் வகையிலும் காட்சிகளை வைத்திருக்கின்றனர். அதனால் படம் சுத்தமாக எடுபடாமல் போயிருக்கின்றது. மொத்தத்தில் இந்த டி பிளாக் மிகவும் சுமாரான படமாக தான் வந்திருக்கிறது.
