ஆன்மீகத் தலைவரான தலாய்லாமா சீனாவை கடுமையாக திட்டி செயற்கையான சீன அதிகாரிகளுக்கு முன்னால் என் உயிர் போவதை விட நான் இந்தியாவில் இறக்க விரும்புகிறேன் என்று கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார்.
திபெத்தில் டெக்ஸ்டர் என்னும் கிராமத்தில் 1935 ஆம் ஆண்டு பிறந்தவர் தான் லாமொ தொண்டுப் என்ற இயற்பெயர் கொண்ட தலாய் லாமா. விவசாய குடும்பத்தை சேர்ந்த இவர் ஆறு வயதில் கல்வி கற்க தொடங்கி படிப்பு, தியானம், விளையாட்டு என எல்லாவற்றிலும் வல்லவராக இருந்தார். வயது ஆகா ஆகா ஆன்மீகத்தில் அதிக கவனம் செலுத்தினார். தன்னுடைய 25 ஆவது வயதில் புத்த சமய தத்துவத்தில் முனைவர் பட்டம் வாங்கினார். ஐம்பதில் முறைப்படி பொறுப்பேற்றார். தலாய்லாமா என்பது புத்த மதத்திற்கான தலைமை பொறுப்பை வகிப்பவரை குறிப்பிடுவதாகும். இவரை தலாய்லாமாவாக தலைமையாக நியமித்ததில் அதிருப்தி அடைந்து சீனா தொடர்ந்து இவரையும் தீபத்தையும் எதிர்த்து வருகிறது.

இந்த நிலையில் தான் தலாய்லாமாவை அமெரிக்காவின் இளம் தலைவர்கள் சந்தித்து உரையாடிய போது தன் மரணம் தொடர்பாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கூறியதை அவர் நினைவு கூர்ந்தார். அப்போது அவர் 15 முதல் 20 ஆண்டுகள் வரை நான் உயிரோடு இருப்பேன். அதில் கேள்விக்கு இடம் இல்லை. மேலும் நான் இறக்கும் நேரம் வரும்போது நான் இந்தியாவை தான் தேர்ந்தெடுப்பேன் என்றார். ஏனென்றால் இறப்பின் போது உண்மையான உணர்வுகளை காண்பிக்கும் நம்பகமான நண்பர்களால் ஒருவர் சூழப்பட்டு இருக்க வேண்டும். சீன அதிகாரிகள் அவரை ஒரு சர்ச்சைக்குரிய பிரிவினைவாத நபராக பார்க்கின்றனர். அதனால் இவர்களுக்கு மத்தியில் நான் இறக்க விரும்பவில்லை. அன்பை காட்டுப்பவர்களால் இந்தியா சூழப்பட்டுள்ளது எனவே நான் அங்கே தான் இறக்க விரும்புகிறேன் எனவும் கூறியுள்ளார்.
