பாலிவுட் நடிகை சுசித்ராவின் மகள் கௌரி டேட்டிங் செய்ய ஒரு செயலியை அம்மாவுக்காக கொடுத்திருக்கிறார்.
பாலிவுட்டில் பிரபலமான ஒரு நடிகையாக இருப்பவர் தான் சுசித்ரா கிருஷ்ணமூர்த்தி. இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் இருந்து வந்தார் மேலும் பாடகியாகவும் இவர் பிரபலமடைந்தார். சமீபத்தில் கார்த்திகேயன் மற்றும் கியரா அத்வானி நடித்த படையப்பா திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது பாலிவுட் ரசிகர்கள் அறிந்ததே சமீபத்தில் இவர் டேட்டிங் செயலியை பயன்படுத்தி இருக்கிறார்.
சுசித்ரா, சேகர் கபூர் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டு பிறகு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். தற்போது இவர்களுக்கு கௌரி என்ற ஒரு மகள் இருக்கிறாள். இவள் அம்மாவின் அரவணைப்பிலேயே வளர்ந்தார். ஒரு கட்டத்தில் அம்மாவின் தனிமையை உணர்ந்த மகள் கௌரி அம்மாவிற்காக டேட்டிங் செயலியை இன்ஸ்டால் செய்து கொடுத்தார். அந்த டேட்டிங் செயலியில் அவரது பெயரை ரெஜிஸ்டர் செய்து அதில் வரும் நண்பர்களுடன் டேட்டிங் செல்லுங்கள் என அம்மாவை வற்புறுத்தினார்.

என்னதான் தற்போதையா காலகட்டத்திற்கு ஏற்ற பெண்ணாக இருந்தாலும் தன்னை ஒரு பழமை வாதியாக காட்டிக் கொள்ளவே சுசித்ரா முற்படுகிறார். மேலும் தன்னுடைய மகள் சொன்னதால் அந்த கணக்கினைத் தொடங்கி அதை பயன்படுத்தவும் சொல்லிக் கொடுத்திருக்கிறார். அதில் நாட்டம் இல்லாவிட்டாலும் தன் மகள் சொன்னதற்காக அதை பயன்படுத்துகிறார். மேலும் தனக்காக ஒரு வாழ்க்கையை நாம் அமைத்துக் கொள்வதாக முன்னதாக தனது மகளுக்கு சத்தியம் செய்து கொடுத்திருக்கிறார்.
அதனால்தான் டேட்டிங் செயலியை பயன்படுத்தவும் அவர் ஒப்புக் கொண்டிருக்கிறார். மேலும் பயன்படுத்திய சில காலத்திற்கு பிறகு சிலருடன் டேட்டிங் செல்ல மகள் வற்புறுத்தியதாக தெரிகிறது. ஆனால் அதில் இவருக்கு சுத்தமாக விருப்பமில்லை இருந்தாலும் தேடிச் சென்று அவர்களையெல்லாம் நண்பராக்கிக் கொண்டார். அதன் பிறகுதன மக்களிடம் இதெல்லாம் எனக்கு பிடிக்கவில்லை நன் நானாகவே இருக்கவே விரும்புகிறேன் எனக்கூறி விட்டு அதிலிருந்து வெளியே வந்திருக்கிறார் சுசித்ரா.
