பாலிவுட்டில் பிரபலமான நடிகை தீபிகா படுகோன் படப்பிடிப்பு தளத்தில் நெஞ்சு வலி ஏற்பட்டதால் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் தீபிகா படுகோன் அவர்கள் தற்போது அஸ்வின் இயக்கும் ஒரு புதிய படத்தில் பிரபாஸ் ஜோடியாக நடித்து வருகிறார்.இந்த படம் ஐதராபாத்தில் ஷூட்டிங் தொடங்கி வேகமாக நடந்து வருகிறது. அந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக நடிகை தீபிகா படுகோன்னுக்கு லேசான நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.
Hot Pics | வயசானாலும் கவர்ச்சியில் கலக்கும் 90’s நடிகை மீரா ஜாஸ்மின்

இதனால் பதட்டமடைந்த படக்குழு உடனே தீபிகா படுகோனேவை மீட்டு பக்கத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து தற்போது உடல் நலம் தேறி வருகிறார். இதையடுத்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நடிகை தீபிகா படுகோன் தற்போது அங்குள்ள ஒரு ஹோட்டலில் மருத்துவர்களின் கண்காணிப்பில் ஓய்வு பெற்று வருகிறார்.
இதை அறிந்த ரசிகர்கள் தீபிகா மீண்டும் உடல்நலம் குணமாகி படப்பிடிப்பு தளத்திற்கு சென்று பழையபடி நடிப்பை தொடர வேண்டும் என சமூக வலைதளங்களில் வேண்டி வருகின்றனர்.
