ஜெயக்குமாரை ஐந்து நாள் காவலில் விசாரிக்க அனுமதி கோரி இருந்தனர் இந்நிலையில் ஜெயக்குமாரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசாரின் மனுவை தள்ளுபடி செய்தது ஜார்ஜ் டவுன் நீதிமன்றம்
இதனை தொடர்ந்து ஜெயக்குமாரின் மகன் கூறியதாவது மனித உரிமை மீறல் நடைபெற்றுள்ளது தனது தந்தையை கைது செய்த காவல்துறையினர் முறையாக நடந்துகொல்லவில்லை எனவும் அதிரடியாக வீட்டிற்குள் நுழைந்து தனது தந்தையை அழைத்து சென்றதாக கூறினார் , அவரது உடல் நலமும் சீராக இல்லை அவர் உட்கொள்ளவேண்டிய மருந்து , மாத்திரைகள் உட்கொள்ளவில்லை , ஆடைகளை மாற்றவும் அவகாசம் தராமல் ஜெயகுமாரை அழைத்து சென்றதாக கூறினார் இதனை மனித உரிமை கமிஷனில் புகார் அளிக்கவிருக்கிறேன் என்று கூறினார்..