கிறிஸ்துவ அகமுடையார் தேவர் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட சங்கத்தின் ஒரு போட்டோ இணையதளத்தில் வெளியாகி படு வைரல் ஆகி வருகிறது.
இயேசு கிறிஸ்துவை பெரும்பாலும் கிறிஸ்தவர்கள் தான் வணங்குவார்கள். இந்து மதத்திலிருந்து ஒடுக்கப்பட்ட சிலர் கிறிஸ்தவர்களாக மதம் மாறினாலும் அவர்களும் இயேசு கிறிஸ்துவை வழங்குவார்கள். கோவையில் கிறிஸ்தவ தேவர் சங்கம் என்று ஒரு போட்டோ இணையதளத்தை சுற்றி வருகிறது. இந்த போட்டோவை பார்த்த பலருமே கிறிஸ்தவர் எப்போது தேவர் சமுதாயத்தில் இணைந்தார் என்று கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
வசூலில் சக்கை போடு போடும் தி லெஜெண்ட் | தமிழ்நாட்டில் மட்டும் இவ்ளோ கோடியா ? | ஹாப்பி அண்ணாச்சி

பொதுவாக திருநெல்வேலி தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் அங்கு இருக்கும் பெரும்பாலான கிறிஸ்தவர்களின் பெயருக்கு பின்னால் நாட்டார் என்றும் அண்ணாச்சி என்றும் சாதிப் பெயர்கள் இருக்கும். தற்போது அதுபோல தேவர் சமுதாயத்தை சேர்ந்த கிறிஸ்தவர்கள் என்று சங்கமும் கோவையில் பிரபல்யம் அடைந்திருப்பதற்கான சான்று தான் இந்த போட்டோ.

இதை தற்போது பலரும் இணையதளத்தில் பகிர்ந்து ஆச்சரியப்பட்டு கொண்டு வருகின்றனர். இவர்கள் கிறிஸ்துவராக இருந்து இந்துக்களாக மதம் மாறியவர்களா அல்லது இந்துக்களாக இருந்து கிறிஸ்தவர்களாக மதம் மாறியவர்களாக என்பது தெரியவில்லை. ஆனால் இந்த போட்டோவை பார்த்தால் நிச்சயமாக எப்படி இது சாத்தியம் என்று தான் யோசிக்க தோன்றும்.
இப்பல்லாம் யார் சார் ஜாதி பாக்குறா……. ???? pic.twitter.com/8aMbBTJDkl
— Jayam Sk Gopi (Jsk Gopi) (@JSKGopi) August 3, 2022