Video Viral | முதுகில் விஜயின் டாட்டூவை போட்ட ரசிகை | அந்த ரசிகையை கட்டி பிடித்து அன்பை வெளிப்படுத்திய விஜய் தேவரகொண்டா

நடிகர் விஜய் தேவரகொண்டாவின் ரசிகை ஒருவர் அவரின் முகத்தை தனது முதுகில் டேட்டோ போட்டுள்ளதை கண்டு விஜய் தேவரகொண்டா அந்த ரசிகையே கட்டி தழுவினார் இந்த வீடியோ தற்போது வெளிவந்திருக்கிறது

இவர் முதன் முதலில் சினிமாவுக்கு வரும்போது சினிமாவின் மீதான காதலால் மிகவும் ஈர்க்கப்பட்டார். எப்படியாவது ஒரு படத்தில் நடித்த நாம் பிரபலமாகிவிட வேண்டும் என்பதே இவரின் ஒரே குறிக்கோள். நாம் எல்லோருக்குமே தெரியும் தெலுங்கு சினிமா என்றாலே வாரிசு நடிகர்கள் தான் அதிகம். அந்த வாரிசு நடிகர்களுக்கு மத்தியில் ஒரு தனி நபராக எந்த ஒரு சினிமா பின்புலமும் இல்லாமல் ஜெயித்துக் காட்டியவர் இவர்இவரின் தேர்ந்த நடிப்பாலும் வசீகரா மிக்க முகத்தோற்றத்தினாலும் அதிக ரசிகைகள் மற்றும் ரசிகர்களை இவர் பெற்றார். தற்போது இவரின் படம் வெளியானால் கண்டிப்பாக 100 கோடி அடிக்கும் என்று சொல்லும் அளவிற்கு இவரின் வளர்ச்சி தெலுகு சினிமாவில் இருந்திருக்கிறது. சில வாரிசு நடிகர்களையே மிஞ்சும் அளவிற்கு இவருடைய ரசிகர் பட்டாளம் அமைந்திருக்கிறது. இவரின் கடின உழைப்பாலும், சினிமாவின் மீது கொண்ட ஆர்வத்தினாலும் இவரின் முழு கலைத்திறமையும் காட்டிய ஒரு படம்தான் அர்ஜுன் ரெட்டி

இந்த படம் இந்திய அளவில் பேசப்பட்ட ஒரு காதல் படைப்பாக அமைந்தது. மேலும் இவரை இந்த படம் தான் உலக அறியச் செய்தது. அப்படிப்பட்ட ஒரு படத்தை கொடுத்த இவர் அதன் பிறகு சில சறுக்கல்களை சந்தித்தார். தற்போது கம் பேக் கொடுக்கும் விதமாக லிகர் என்ற படத்தில் நடித்துள்ளார்.

“நெனச்சா தோணும் இடமே” மனைவியுடன் கொஞ்சல் செய்யும் போட்டோவை பதிவிட்டு மகிழ்ந்திருக்கும் விக்னேஷ்

ஏற்கனவே இவரின் லிகர் படத்தில் வேலைகளை மும்முரமாக நடந்து வரும் நேரத்தில் ஒரு ரசிகை ஒருவரை சந்தித்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகியிருக்கிறது. அதில் அந்த ரசிகை விஜய்யை பார்ப்பதற்காக அந்த இடத்திற்கு வருகிறார். அப்போது பதட்டம் கலந்த ஒரு மகிழ்ச்சியை அவர் முகத்தில் நாம் காண முடிகிறது. மேலும் தொடர்ந்து அந்த ரசிகை விஜயிடம் பேசிக்கொண்டே இருந்தபோது தனது முதுகில் இருக்கும் அவருடைய போட்டோ பதிந்த ஒரு டேட்டுவை அவருக்கு காண்பித்தார்.

மேலும் விஜய் தேவரகொண்டாவிடம் இந்த விஷயத்தை பகிர்ந்தவுடன் உடனே அந்த இடத்திலேயே அவர் அழ ஆரம்பித்து விட்டார். உடனே விஜய் அவரை அனைத்து கொண்டு தேற்றினார். இந்த வீடியோ தற்போது ரசிகர்களிடையே படு வைரல் ஆகி வருகிறது.

Spread the love

Related Posts

மைத்தனத்தில் அடித்து கொண்ட பாகிஸ்தான், அப்கானிஸ்தான் ரசிகர்கள் | வைரல் வீடியோ

பரபரப்பான ஆட்டத்தில் நேற்று ஆப்கானிஸ்தான் அணியை பாகிஸ்தான அணி தோற்கடித்ததும் ஸ்டேடியத்தில் ரசிகர்கள் ஒருவருக்கொருவர் சேர்களை

“எதிர்காலத்திற்காக அவர் என்ன செய்தார்” | ஆஸ்திரேலியாவின் தலைமை பயிற்சியாளர் லாங்கரை பற்றி விமர்சனம் செய்த பேட் கம்மின்ஸ்

கடந்த சில தினங்களாக ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்தில் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் திடீரென்று தாமாக

தந்தூரி சிக்கன் சாப்பிட்ட ஆரணியை சேர்ந்த மாணவன் திருமுருகன் உயிரிழப்பு

சக நண்பர்களுடன் தந்தூரி சிக்கன் சாப்பிட்ட மாணவன் திருமுருகன் உயிரிழப்பு ஆரணியில் தந்தூரி சிக்கன் சாப்பிட்டதால்

x