நடிகர் அஜித் ஆலோசகராக பணியாற்றிய தக்க்ஷா குழு மத்திய அரசுக்கு டிரோன்களை தயாரித்து கொடுக்கும் பணிக்கு தேர்வு | கொண்டாட்டத்தில் AK ரசிகர்கள்

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் தக்க்ஷா என்ற குழு ஆளில்லா விமானத்தை தயாரித்து வருகிறது. இந்த குழுவிற்கு நடிகர் அஜித் ஆலோசகராகவும் செயல்பட்டார் மேலும் இந்த குழு தற்போது மத்திய அரசுக்கு பறக்கும் ஆளில்லா விமானங்களை தயாரித்து கொடுப்பதற்காக தேர்வாகியுள்ளது.

இந்தக் குழு மாநில அளவில் பல சாதனைகளை பெற்று வந்தது குறிப்பாக மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் மத்திய பயணிகள் விமான சேவை துறை சார்பாக ஆளில்லா விமானம் தயாரிப்பதற்கு சென்னையில் தக்க்ஷா குழு தேர்வகியது.

அண்ணா பல்கலைக்கழகம் உலக அளவில் அங்கீகாரம் பெற்ற பொறியியல் கல்லூரி ஆகும். இதில் பொறியியல் படிப்பு பிரிவுகள் நிறையவே உள்ளது. குறிப்பாக விமானம் குழு ஒன்று தக்கஷா என்று பெயரிடப்பட்டு அந்த பிரிவில் நடிகர் அஜித்தை ஆலோசகராக நியமித்தது அந்த பல்கலைக்கழகம். அந்த விமான பிரிவு மாணவர்களுக்கு அடிக்கடி நடிகர் அஜித் பயிற்சிகளையும், ஆலோசனைகளையும் வழங்குவார்.

கே.ஜி.எஃப் படத்தின் தயாரிப்பு நிறுவனத்துடன் கூட்டு சேரும் சுதா மற்றும் சூர்யா காம்போ | ப்பா வேற லெவல் அப்டேட்டா இருக்கே

இவரின் ஆலோசனைக்கு கீழ் செயல்பட்ட மாணவர்கள் இந்திய அளவில் நடந்த போட்டியில் முதல் மூன்று இடங்களை பெற்று சாதனை புரிந்தனர். தற்போது மத்திய அரசுக்கு விமானங்களை தயாரித்து தருவதற்கு
இந்த ஆளில்லா விமானம் தயாரிக்கும் தக்க்ஷா குழு தேர்வாகியுள்ளது.

நடிகர் அஜித்குமார் பத்தாம் வகுப்புக்கு மேல் படிப்பு வரவில்லை என்று பாதியில் பள்ளி வாழ்க்கையை கைவிட்டவர். மெக்கானிக் வேலையை செய்து அதிலிருந்து முன்னேற்றம் அடைந்தவர் பின்பு சினிமாத்துறையில் படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார். என்னதான் பள்ளியில் 10ஆம் வகுப்போடு படிப்பை நிறுத்தி விட்டாலும், இவருக்கு ஐந்து மொழிகளுக்கு மேல் தெரியும் எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிட்டிகளில் கை தேர்ந்தவர். துப்பாக்கி சுடுதல், ஏரோ மாடலிங், பைக் ரேசிங், போட்டோகிராஃப் என்று பன்முகத் திறமை பெற்றவர் நடிகர் அஜித்குமார். அவர் வெறும் நடிகர் மட்டுமல்ல பள்ளிப்படிப்பு இல்லாவிட்டாலும் நம்மால் சாதிக்கமுடியும் என்று சக இளைஞர்களுக்கு ஒரு இன்ஸ்பிரேஷன் என்று இதன் மூலமாக நமக்கு கண்கூடாகவே தெரிகிறது.

Spread the love

Related Posts

“இளையராஜாவுக்கு பாரத ரத்னா கிடைக்கவேண்டும்”….”நான் அண்டங்காக்கா கருப்பு…” யுவனுக்கு பதிலடி கொடுத்த அண்ணாமலை

யுவன் சங்கர் ராஜா கருப்பு திராவிடன் என்று காப்ஷன் போட்டு பதிவிட்டிருந்த இன்ஸ்டா போஸ்டுக்கு திரு

முள் காட்டுக்குள் பெண்ணின் கதறல் – குவிந்த ஊர்மக்கள் காத்திருந்த அதிர்ச்சி

முள் கட்டுக்குள் தனக்கு தானே பிரசம் பார்த்துக்கொண்டு பிறந்த குழந்தையை வீசிவிட்டு சென்ற சம்பவம் ஊர்

ஐஸ்வர்யாவை “தோழி” என குறி சர்ச்சையில் சீக்கிய தனுஷ் | ரசிகர்கள் அதிருப்தி | லாவகமாக கையாண்ட ஐஸ்வர்யா

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தம்பதியினர் சென்ற மாதம் இருவரும் பேசி வைத்துக்கொண்டு அறிக்கைகளை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக

Latest News

Big Stories