தமிழகத்தைச் சேர்ந்த தடகல வீராங்கனை தனலட்சுமிக்கு ஊக்க மருந்து சோதனை செய்ததில் அவர் ஊக்க மருந்து உட்கொண்டுள்ளதால் மூன்று ஆண்டுகளுக்கு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள அதிரடி தடை விதிக்கப்பட்டுள்ளது.
மே மாதம் துருக்கியில் ஊக்க மருந்து பரிசோதனை நடைபெற்றது, அதில் தோல்வி அடைந்த ஒலிம்பிக் வீராங்கனை தனலட்சுமி தடகல ஒருமைப்பாட்டு பிரிவு மூன்று ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்துள்ளது. இவருக்கு வயது வெறும் 24 தான் இந்த ஆண்டு 100 மற்றும் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் அதிவேகமாக ஓடிய வீராங்கனை என்று பெருமை பெற்றவர். தற்போது இவர் ஊக்க மருந்து சோதனையில் தோல்வி அடைந்ததால் 3 ஆண்டுகளுக்கு விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்வதற்கு தடை விதித்துள்ளது.

இது போன்ற செயல்களுக்கு குறிப்பாக நான்கு ஆண்டுகள் இடைநீக்கம் செய்யப்படுவது வழக்கம். ஆனால் ஊக்க மருந்து உட்கொண்டதை ஒப்புக் கொண்டதால் இவருக்கு ஓராண்டு குறைக்கப்பட்டு வெறும் மூன்று ஆண்டுகள் தான் கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் மே ஒன்றாம் தேதி முதல் இவருக்கு கிடைத்த பட்டங்கள் விருதுகள் பதக்கங்கள் மற்றும் ஜூன் மாதம் சென்னையில் மாநிலங்களுக்கு இடையேயான போட்டியில் அவர் பெற்ற தங்கங்கள் போன்றவற்றை அவரிடம் இருந்து பறிக்கப்படும் என்று தடகள ஒருமைப்பாட்டு பிரிவு அறிவித்துள்ளது. இதே போன்று தான் கடந்த ஆண்டு தமிழ்நாடு ஊக்க மருந்து சோதனையில் தோல்வி அடைந்ததால் நான்கு ஆண்டுகள் தடகள ஒருமைப்பாட்டு பிரிவு இடைநீக்கம் செய்து உத்தரவிட்டது.
“கையில சாட்சியும் இல்ல, மண்டைல மூளையும் இல்ல…” அண்ணாமலையை பங்கமாக கலாய்த்த செந்தில் பாலாஜி
