தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தம்பதியினர் சென்ற மாதம் இருவரும் பேசி வைத்துக்கொண்டு அறிக்கைகளை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக இல்லற வாழ்க்கையில் இருந்து நீக்குவதாக தெரிவித்தனர். இதைக் கண்டு அவர்களின் ரசிகர்கள் இத்தனை வருடங்கள் சந்தோஷமாக இருந்த இந்த தம்பதி திடீரென்று இப்படி பிரிவதற்கு காரணம் என்னவோ என்று பலரும் யோசித்த வண்ணம் உள்ளனர்.
இவர்கள் இருவருக்கும் இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர். இந்த பிள்ளைகளுக்காகவாது இவர்கள் இருவரும் சேர்ந்து வாழவேண்டும் என்று பலரும் கூறியுள்ளனர். இதற்கிடையில் தனுஷின் அப்பா கஸ்தூரிராஜா அவர்களும் ஒரு பேட்டியில் இவர்கள் இருவரும் ஒரு மனஸ்தாபம் ஏற்பட்டு தான் பிரிந்து இருக்கின்றார்கள். எனவே கூடிய சீக்கிரம் இவர்கள் ஒன்று சேருவார்கள் என்று நம்பிக்கை தந்தார் ஆனால் இப்போது தனுஷ் போட்ட ஒரு வீட்டை பார்க்கும் போது அப்படி ஒன்று சேர்வதாகவே தெரியவில்லை.
அந்த ட்வீட் என்னவென்றால், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்கள் ஒரு ஆல்பம் சாங் இயக்கியிருக்கிறார் அந்த ஆல்பம் சாங் ரஜினிகாந்த் உட்பட பல பிரபலங்கள் அவர்களது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். அதில் தனுஷும் ஒருவர். தனுஷ் அவர்களும் அந்த லிங்கை அவர்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு ஐஸ்வர்யா அவர்களை வேணுமென்றே “தோழி” என்று பதிவிட்டிருக்கிறார். தனுஷ் ரசிகர்கள் இதை கண்டதும் என்ன தனுஷ் இப்படி செய்துவிட்டாரே என்று அதிருப்தியில் உள்ளனர்.
ஐஸ்வர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் இருந்து தனுஷின் பெயரை கூட இன்னும் நீக்கவே இல்லை. அதனால் இருவரும் ஒன்று சேர்ந்து விடுவார்கள் என்று ரசிகர்கள் எண்ணிய நிலையில் தனுஷ் அவர்கள் ஐஸ்வர்யாவை தோழி என்று சொல்லி மொத்தமாக ஆப் செய்துவிட்டார். இதனால் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர் இதற்கு பதிலளிக்கும் வகையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்களும் அந்த வீட்டிற்கு சென்று பதிவிட்டிருக்கிறார். இதனை பார்த்ததும் இவர்கள் இருவரும் இணைய வாய்ப்புகள் மிகவும் குறைவு என்றுதான் தோன்ற வைக்கிறது.