வெளிநாட்டில் அஜித்தையும், தமிழ்நாட்டில் விஜயையும் வசூலில் முறியடித்திருக்கிறார் தனுஷ் | திருச்சிற்றம்பலம் எபெக்ட்

தனுஷின் திருச்சிற்றம்பலம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது.

இந்த படத்தில் தனுஷ், நித்யா மேனன், பிரகாஷ் ராஜ், பாரதிராஜா, பிரியா பவானி சங்கர், ராசி கண்ணா ஆகியோர்கள் லீட் ரோலில் நடித்து இருந்தனர். இந்த படம் வெளியானதிருந்து நல்ல விமர்சனங்களை பெற்று தனுசுக்கு ஒரு தியேட்டர் கம் பேக் படமாக இந்த படம் அமைந்தது. இயக்குனர் மித்ரன் ஜவகர் இயக்கத்தில் வெளிவந்த இந்த படம் வசூலிலும் சாதனை படைத்து பல முன்னணி ஹீரோக்களின் வசூலை தகர்த்தெறிந்து இருக்கிறது என தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் தனுஷின் திருச்சிற்றம்பலம் படம் ஆஸ்திரேலியாவில் 1.7 கோடி ரூபாய் வசூலித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பிரான்ஸ் நாட்டில் 13 ஆயிரத்திற்கும் மேலாக திருச்சிற்றம்பலம் படத்தின் டிக்கெட் விற்பனையாகியுள்ளதால் இதன் மூலம் 2022 ஆம் ஆண்டில் இந்த இரு நாடுகளிலும் அதிக வசூல் செய்த தமிழ் படம் என்ற பெருமையை திருச்சிற்றம்பலம் பெற்றிருப்பதாகவும் அது தற்போது மூன்றாவது இடத்தை பிடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. முன்னதாக அஜித் நடித்த வலிமை திரைப்படம் 2022 ஆம் ஆண்டின் மூன்றாவது அதிக வசூல் செய்த படம் என அந்த இரண்டு நாடுகளில் கருதப்பட்டது.

“விக்ரமின் கோப்ரா படம் வெளியிட தடை” – அதிரடி உத்தரவை போட்ட சென்னை உயர்நிதிமன்றம்

ஆனால் தற்போது அதை தகர்த்தெறிந்து திருச்சிற்றம்பலம் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. ஏற்கனவே விக்ரம் மற்றும் பீஸ்ட் முதல் இரண்டு இடங்களை பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து தற்போது விஜயின் பீஸ்ட் பட வசூலையும் தமிழ்நாட்டில் இந்த படம் முறியடித்து இருக்கிறது என தகவல் வெளிவந்துள்ளது. இந்த படம் தமிழ்நாட்டில் மட்டும் 70.75 கோடி வசூல் செய்துள்ளது, பீஸ்ட் படம் 65.64 கோடி வசூல் செய்துள்ளது. தற்போது இந்த படத்தின் வசூலையும் தமிழ்நாட்டில் தனுஷின் திருச்சிற்றம்பலம் முறியடித்து இருக்கிறது என கூறப்படுகிறது.

Spread the love

Related Posts

மஹாலக்ஷ்மி இவ்வளவு சம்பளம் வாங்குகிறாரா ?

சன் டிவி தொகுப்பாளனி மற்றும் சீரியல் நடிகையுமான மகாலட்சுமி திடீரென திருமணம் செய்து கொண்ட போட்டோவை

சொத்து வரி செலுத்தாததால், சென்னையில் பிரபல ஆல்பர்ட் திரையரங்கை ஜப்தி செய்து அதிரடி காட்டியுள்ளது மாநகராட்சி

சென்னையில் பிரபல திரையரங்கு ஆனா ஆல்பர்ட் திரையரங்கம் சொத்துவரி செலுத்தாதன் காரணமாக அதிரடியாக சீல் வைத்து

சேலம் எட்டு வழி சாலை பற்றி எங்கள் ஆட்சியில் எதிர்த்து விட்டு தற்போது அதற்க்கு ஆதரிக்கின்றனர் திமுக | கிழித்து தொங்கவிட்ட EPS

சேலம் மாநகராட்சியில் தையல் மையத்தை திறந்த எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி