ரோகினி திரையரங்கில் கூட்டத்திற்கு நடுவில் நடிகை ராசி கண்ணாவின் கையைப் பிடித்து ஒரே ஓட்டமாக காருக்கு ஓடிய தனுஷின் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
இயக்குனர் மித்ரன் அவர்கள் இயக்கத்தில் தனுஷ், ராசி கண்ணா, பிரியா பவானி சங்கர், நித்யா மேனன், பிரகாஷ்ராஜ், பாரதிராஜா போன்றவர்கள் நடித்து இன்று திரையரங்கில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம் தான் திருச்சிற்றம்பலம். இந்த படத்திற்கு காலையிலிருந்து நல்ல விமர்சனங்களை தான் பெற்று வருகிறது.

மேலும் தனுஷிற்கு இது ஒன்றரை வருடம் கழித்து வெளியாகும் முதல் தியேட்டர் ரிலீஸ் ஆகும் அதனாலேயே தனுஷின் ரசிகர்கள் வெறித்தனமாக இந்த படத்திற்காக காத்திருந்தனர். அப்போது ரோகிணி திரையரங்கில் தனுஷ் மற்றும் அனிருத் உடன் சேர்ந்து திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்த படக்குழுவினர் ஒரு சிலர் வந்திருந்தனர்.
அதனால் திருச்சிற்றம்பலம் படத்தின் நடிகர்களை பார்த்த ரசிகர்கள் படம் முடிந்த பின்பு அவர்களை நோக்கி படையெடுத்தனர். இதனால் ரசிகர்களிடமிருந்து எந்த ஒரு அசம்பாவிதமும் காயமும் ஏற்பட்டு விட கூடாது என்பதற்காக நடிகை ராசி கண்ணாவின் கையை பிடித்து ஒரே ஓட்டமாக ஓடி பத்திரமாக அவரை பத்திரமாக காரில் கொண்டு போய் சேர்த்தார் தனுஷ். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
