நேற்று மும்பையில் நடந்த ஆட்டத்தில் சென்னை மற்றும் லக்னோ அணிகள் பலப்பரீட்சை நடத்தியது. இதில் லக்னோ அணி இமாலய இலக்கை எட்டி சென்னை அணியை வெற்றி பெற்றது.
முதலில் டாஸ் ஜெயித்து சென்னையை பேட்டிங் செய்ய அழைத்த லக்னோ கேப்டன் கே.எல் ராகுல் முதல் இன்னிங்சில் ஓவர்களில் ரொட்டேஷன் செய்வதிலும் பில்டிங் பிளேஸ்மெண்ட் செய்வதிலும் சில தவறுகளை செய்தார். அந்த தவறுகளை பயன்படுத்திக்கொண்டு சென்னை ஒரு இமாலய இலக்கை லக்னோ வுக்கு நிர்ணயித்தது.
இந்த இமாலய இலக்கை நோக்கி பேட் செய்த லக்னோவில் தொடக்கத்திலிருந்து இறுதிவரை அதிரடி காட்ட தயங்கவே இல்லை. முதல் ஒவரிலிருந்து இறுதி ஓவர் வரை பந்தை பறக்கவிட்டனர். கடைசி ஓவரில் ஜெயிக்க 9 ரன்களில் இருந்த போது இரண்டு அகலபந்து ஒரு சிக்ஸ் ஒரு போர் என அந்த ஆட்டத்தை முடித்து வைத்தனர். இந்த ஆட்டத்தை பெவிலியனில் கண்ட கம்பீர் துள்ளி குதித்து தனது ஆக்ரோஷத்தை அங்கு காட்டினார். இந்த போட்டோக்களும் வீடியோக்களும் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

அவருக்கும் தோனிக்கும் ஒரு சிறிய தகராறு இருப்பதாகவும் அதனால் தான் அவர்களுக்குள் அவ்வப்போது மோதிக் கொள்கிறார்கள் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது அதனால்தான் சென்னை ஆணியை வென்றவுடன் இப்படி ஆக்ரோஷத்தை காட்டுகிறார் என்று பலரும் கருத்து தெரிவித்தனர். ஆனால் அந்தக் கருத்துக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஆட்டம் முடிந்ததும் தோனி மற்றும் கம்பீர் இருவருமே ஒன்று சேர்ந்து கலகலப்பாக உரையாடிய ஒரு வீடியோ வெளியானது.

அந்த வீடியோவில் இருந்து இவர்கள் இருவரும் ஜாலியாக தான் இருக்கிறார்கள். ரசிகர்கள் தான் வீணாகும் சண்டையிட்டுக் கொள்கிறார்கள் என்று நன்றாகவே தெரிகிறது. மேலும் கம்பீர் இன்ஸ்ட்டா பக்கத்தில் தோனியுடன் உரையாடியது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று பதிவிட்டிருந்தார். ரசிகர்கள் இதை பார்த்தாவது இனிமேல் சமூக வலைதளங்களில் சண்டை போடாமல் இருக்கவேண்டும் என்று சக கிரிக்கெட் ரசிகர்கள் சொல்லி வருகின்றனர்.
❤️❤️🌺#LSG #CSK #IPL2022 pic.twitter.com/ebzYVt61Sw
— Animesh Choudhary 🇮🇳 (@Imanimeshation) March 31, 2022