கிரிக்கெட் வீரர் எம்எஸ் தோனி தமிழில் தயாரிக்கவிருக்கும் படத்தில் நயன்தாராவாக நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கிரிக்கெட் உலகில் ஜாம்பவானாக விளங்கும் தோனி அவர்கள் சென்னை அணிக்கு கேப்டனாக இருந்து 4 கோப்பைகளை இதுவரை வென்றுள்ளார். உலகில் தலை சிறந்த கேப்டன் பட்டியல் எடுத்தால் அவரின் பெயர் கண்டிப்பாக அதில் இருக்கும். அந்த அளவிற்கு கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெருமையை தேடித் தந்தவர். உலக அரங்கில் இந்திய அணிக்கு ஒரு கௌரவத்தை வாங்கித் தந்தவர் எம்எஸ் தோனி.
பிறந்த நாளன்று தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்தார் நமீதா | ரசிகர்கள் ஷாக்

அப்படிப்பட்ட பெருமை மிகு ஒரு வீரர் தமிழில் ஒரு திரைப்படம் எடுக்க உள்ளதாகவும் அந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தமிழ் திரைப்படங்கள் தயாரிப்பதற்காக தோனி ஆரம்பித்துள்ள நிறுவனத்தில் ரஜினிகாந்தின் முன்னாள் உதவியாளர் சஞ்சய் இணைந்துள்ளதாகவும். அவர்தான் தோனியின் நிறுவனத்தை தற்போது கண்காணித்து வருவதாகவும் ஒரு தகவல் பரவியிருக்கிறது.

மேலும் இந்த படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் சில நடிகர் நடிகைகளின் தேர்வுகள் விரைவில் வெளியாகும் என சினிமா வட்டாரங்களிலும் கிரிக்கெட் வட்டாரங்களிலும் எதிர்பார்க்கப்படுகிறது.