நடிகர் விக்ரமுக்கு உடல் நலக்குறைவு காரணமாக அவரை காவிரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாக தகவல் வெளியானது. உடனே இவருக்கு நெஞ்சுவலியாக இருக்குமா என பலரும் சிலாகிக்க தொடங்கிவிட்டனர். அதனால் அதற்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காக அவரின் மகனான துருவ் விக்ரம் தற்போது அவர் இன்ஸ்டா பக்கத்தில் ஒரு ஸ்டோரியை போட்டு இருக்கிறார். அதாவது “அன்பான ரசிகர்களே என்னுடைய அப்பாவிற்கு சின்ன இருதயம் சம்பந்தமான பிரச்சனை இருந்துள்ளது அதற்காகத்தான் மருத்துவமனையில் கொண்டு வந்தோம்

அவருக்கு மாரடைப்பு எல்லாம் கிடையாது. இதை தவறாக இணையதளத்தில் யாரோ திரித்து பேசுகின்றனர். அதனால் எனக்கும், எனக்காகவும் எங்களின் குடும்பத்திற்காகவும் இத்தகைய விஷயத்தை யாரும் பரப்பாமல் இருங்கள். சீயான் விக்ரம் தற்போது நலமாக உள்ளார். ஓரிரு நாட்களில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்.

நான் இப்போது கூறிய இந்த தகவல்கள் உங்களுக்கு போதுமானதாக இருக்கும் என்று நம்புகிறேன். அதனால் பொய்யான தகவல்களை யாரும் நம்ப வேண்டாம் என அவர் அதில் கூறியிருக்கிறார். இதனை கேட்டு தற்போது சியான் விக்ரம் ரசிகர்கள் மனநிம்மதி அடைந்திருக்கின்றனர். எனவே இன்னும் ஓரிரு நாட்களில் விக்ரம் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டால் சீக்கிரம் கோப்ரா படங்களின் ப்ரோமோஷன் வேலைகளில் தீவிரமாக இறங்குவார் எனவும் கூறப்படுகிறது.
#DhruvVikram on #ChiyaanVikram s health!
— Gopi (@gopi_tweetss) July 8, 2022
Chiyaan is fine guys! Nothing to worry ❤️ pic.twitter.com/0POliYtikw