இயக்குனர் நெல்சனை ட்ரோல் செய்யாதீர்கள் என்று டைரக்டர் லோகேஷ் ரசிகர்களுக்கு பணிவான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நெல்சன் இயக்கத்தில் இரண்டு மாதத்திற்கு முன் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் தான் பீஸ்ட். இந்த படம் பெரிய அளவில் மக்களை ஈர்க்க வில்லை. மேலும் விஜய் ரசிகர்களே இந்த படத்தை கழுவி ஊற்றினார்கள். அந்த அளவிற்கு ஒரு மொக்கையான படமாக பீஸ்ட் வெளிவந்தது. அதனால் விஜய் ரசிகர்கள் இயக்குனர் நெல்சனை கடுமையாக தாக்கி பேசினர். இதனால் மனமுடைந்து போனார் நெல்சன். தற்போது அவரின் பேச்சை குறைத்து கொண்டு வேலையில் இறங்க தயாராகியிருக்கிறார்.

இதுகுறித்து இயக்குனர் லோகேஷ் பிரபல தனியார் மீடியா நேர்காணலின் ஒன்றில் பேசிய போது:- “இயக்குனர் நெல்சனை இப்படி ட்ரோல் செய்வது நல்லதல்ல. அவரை எனக்கு நன்றாக தெரியும் நாங்கள் இருவரும் ரொம்ப காலமாகவே நண்பர்களாக இருக்கிறோம். ஒருவருக்கு ஒருவர் நன்றாக புரிந்திருக்கிறோம். நான் சில விஷயங்களை பேச பயப்படுவேன் அனால் நெல்சன் எதுவாக இருந்தாலும் ஓப்பனாக பேசிவிடுவார். அதனால் தான் அவரை அப்படி விமர்சிகிறார்கள். இது மிகவும் தப்பான செயல். இது போன்ற சறுக்கல் கண்டிப்பாக எல்லோருக்கும் வரும். எனக்கும் அது வரும். சில ட்ரோல் ரசிக்கும்படி இருக்கும். சில ட்ரோல் முகம் சுளிக்கும் படி இருக்கும். அதனால் ரசிகர்கள் ட்ரோல் செய்வதை விட்டு விட்டு அவரை ஊக்குவியுங்கள், என அன்பு வேண்டுகோளை ரசிகர்களுக்கு விடுத்துள்ளார்.
