தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனரான பாலா அவர்கள் தனது மனைவியுடன் விவாகரத்து வாங்கி பிரிந்தார்.
சேது பிதாமகன் பரதேசி போன்ற விருது படங்களை எடுத்து ரசிகர்களை கொண்டாட செய்தவர்தான் பாலா. சூர்யா மற்றும் விக்ரம் தற்போது ஒரு முன்னணி ஹீரோவாக இருக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் பாலா அவர்கள் தான். இவரின் படத்தில் நடிக்க எத்தனையோ இளம் நடிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர் இயக்குனர் தயாரிப்பாளர் என்று பன்முகத் திறமை கொண்டவர் தான் இவர்.
இவர் 2004 ஆம் ஆண்டு அவரின் உறவினர் பெண்ணான முத்து மலரை திருமணம் செய்தார். திருமணத்திற்குப் பின்னர் இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் குடும்ப நல நீதிமன்றத்தில் இவர்கள் இருவரும் விவாகரத்து பெற்று சட்டப்பூர்வமாக பிரிந்தனர், இந்த செய்தியை அறிந்த ரசிகர்கள் மற்றும் சினிமா துறையினர் சற்று அதிர்ச்சியில் உள்ளனர் என்று தான் கூற வேண்டும்.