உதயநிதி மனைவிக்கு உதயநிதியால் ஏற்பட்ட பெரும் சிக்கல் | இருந்தாலும் மனைவிக்காக உதய் விட்டு கொடுத்திருக்கலாம் …

தியேட்டரில் படம் பார்க்க வரும் ரசிகர்கள் கூட என்னுடைய படத்தை OTT-யில் பார்க்க வேண்டும் என கணவருக்கு அன்பு கட்டளை இட்டு இருக்கிறார் மனைவி கிருத்திகா.

உதயநிதி ஸ்டாலின் அவர்களின் மனைவியான கிருத்திகா ஒரு சினிமா இயக்குனர் என நம்மில் பலருக்கு தெரியும். இதற்கு முன்பு விஜய் ஆண்டனியை வைத்து காளி என்னும் படத்தை இயக்கினார். அந்த படத்தில் விஜய் ஆண்டனி கொள்ளைக்காரனாக நடித்து இருந்தார். இந்த படத்தில் அஞ்சலி, சுனைனா, ஷில்பா, மஞ்சுநாத் உள்ளிட்டோ நடித்திருந்தனர். 2018 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தை பாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்திருந்தார். விஜய் ஆண்டனியே இந்த படத்திற்கு இசையும் அமைத்திருந்தார்.

தற்போது இவர் பேப்பர் ராக்கெட் எனப்படும் ஒரு வெப் சீரிஸை எடுத்து இருக்கிறார். அந்த வெப் சீரிஸின் ட்ரெய்லர் வெளியீடு விழா அண்மையில் நடந்தது. அப்போது அதில் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தனது மனைவி குறித்து ஒரு சில வார்த்தைகளை கூறியிருக்கிறார். அப்போது பேசிய அவர் :- “என்னுடைய மனைவி கிருத்திகா இந்த படத்திற்காக மிகவும் உழைத்திருக்கிறார். இந்த படபிடிப்பின் போது அவரின் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. அவரைக் காண மருத்துவமனைக்கு கிரித்திகா சென்றிருந்தார். அப்போது அவரின் அம்மா உனக்கு உன்னுடைய வேலை தான் முக்கியம் நீ கிளம்பு நான் பார்த்துக்கிறேன் என்று கூறியிருக்கிறார், எப்போதுமே அவரின் அம்மாவும் சரி கிருத்திகாவும் சரி துணிச்சல் ஆனவர்கள்.

இந்த வெப் சீரியஸில் பல கதாபாத்திரங்களை துணிச்சலுடன் தான் எழுதி இருக்கிறார் கிருத்திகா. அந்த துணிச்சலும் அவரின் படைப்புகளில் பிரதிபலிக்க வேண்டும் என நினைக்கிறார். இந்த வெப் சீரிஸ் OTT-யில் வெளியாக உள்ளது மேலும் இந்த ரிலீஸை நினைத்து கிருத்திகா மிகவும் டென்ஷனாக இருக்கிறார். அண்மையில் சந்தானம் நடிப்பில் வெளிவந்திருக்கும் குழு குழு படத்தை திரையிட்டு என்னை இந்த படம் ரிலீஸ் செய்து தருமாறு கேட்டுக் கொண்டார். அதனால் அவருக்காக நான் அந்த படத்தை ரிலீஸ் செய்கிறேன் என ஒப்புக் கொண்டுள்ளேன். அந்த படத்தின் ரிலீஸ் தேதி வருகிற 28ஆம் தேதி தான் முடிவு செய்து இருக்கிறோம். கிருத்திகாவின் பேப்பர் ராக்கெட் படமும் 28ஆம் தேதி தான் வெளியாகிறது. இதனால் என்னிடம் கிருத்திகா டென்ஷன் ஆகி வாதிட்டார்.

புது பட ரிவியூ | அருள்நிதி நடிப்பில் வெளியாகி இருக்கும் தேஜாவு படம் எப்படி இருக்கு ? | உண்மையான விமர்சனம்

அதாவது என்னுடைய பேப்பர் ராக்கெட் வெப் சீரிஸும் 28ஆம் தேதி தான் வெளியாகிறது. அதனால் உங்களுடைய படத்தை தள்ளி வைக்கலாம் என கேட்டார். ஆனால் இது தியேட்டர் வெளியீடு உன்னுடையது OTT என கூறினேன் ஆனாலும் அவர் ஒப்புக் கொள்ளவில்லை. அன்றைக்கு திரையரங்கிற்கு வரும் ரசிகர்களும் என்னுடைய படத்தை OTT யில் பார்ப்பார்கள் அல்லவா என கூறி இருந்தார். தியேட்டரில் படம் பார்க்க வரும் ஆடியன்ஸ் கூட அன்றைய நாளில் அவரின் படத்தை பார்க்க வேண்டும் என எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார் கிருத்திகா” என நகைச்சுவையாக கூறியுள்ளார் உதய்.

Spread the love

Related Posts

முதல்வர் ஸ்டாலினை கெட்ட வார்த்தையில் திட்டிய பாஜக பிரமுகர் அதிரடி கைது

தனது மாமன் பெண் காதலனுடன் ஓடிப்போனதை சுட்டிக்காட்டி முதலமைச்சர் ஸ்டாலின் குறித்து அவதூறு வீடியோ வெளியிட்ட

புது பட ரிவியூ | பிராபாஸின் ராதேஷ்யாம் படம் எப்படி இருக்கு ? | உண்மையான விமர்சனம்

ராஜா கிருஷ்ண குமார் இயக்கத்தில் பிரபாஸ், பூஜா, சத்யராஜ், ஜெகபதிபாபு போன்றவர்கள் நடித்து இன்றைக்கு திரைக்கு

“ஆம்பூர் என்ன வடமாநிலமா ? ஆம்பூர் பிரியாணி திருவிழாவில் பீப் பிரியாணிக்கு தடை விதித்தால்….” விசிகவினர் கொந்தளிப்பு

ஆம்பூரில் நடைபெறும் பிரியாணி திருவிழாவில் பிப் பிரியாணியை தடை செய்யப்பட்டதற்கு எதிராக விடுதலை சிறுத்தை கட்சி,