“கயல் சீரியலில் வரும் கயல் போல தான் சின்னம்மா” மேடையில் கூறி கண்ணீர் வடித்த திவாகரன்

கயல் சீரியலில் வரும் கயல் போன்று தான் எங்கள் சின்னம்மா என மேடையில் நெகிழ்ச்சி அடைந்தார் அவரின் சகோதரன் திவாகரன்.

சென்னை வானகரம் ஸ்ரீவாரி மண்டபத்தில் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதனிடையே இறுதியாக உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நம்பி இருந்த ஓபிஎஸ்க்கு நீதிமன்றம் தீர்ப்பு அவருக்கு சாதகமாக வழங்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்திற்கு சென்று எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்களுடன் சண்டையிட்டனர். இதனால் அந்த பகுதியை கொஞ்ச நேரம் கலவர பூமியாக மாறியது. இது தொடர்பாக அதிமுகவினர் மேல் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த சமயத்தில் அதிமுகவில் உள்கட்சி பூசல் நடந்து கொண்டிருப்பதால் சசிகலாவின் அண்ணன் திவாகரன் தனது கட்சியை சசிகலாவுடன் இணைக்கிறேன் என அதிகாரபூர்வமாக கூறியுள்ளார். 2018 ஆம் ஆண்டு கட்சி தொடங்கிய திவாகரன் தனது கட்சிக்கு அண்ணா திராவிட கழகம் என பெயரிட்டு இருந்தார். இந்த கட்சிக்கு என் பெயரையோ என் முகத்தையோ பயன்படுத்தக்கூடாது என வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். அதனால் அப்போது திவாகரன் இனிமேல் சசிகலா என் சகோதரியே கிடையாது என பரபரப்பாக பேசியிருந்தார். தற்போது அதே திவாகரன் தான் சசிகலாவை நமது கட்சி உடன் இணைத்துக் கொண்டார்.

மேலும் சசிகலா முன்னிலையில் கண்ணீருடன் மேடையில் பேசினார் திவாகரன். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சசிகலாவுக்கு அமைச்சர் பதவி வழங்கி அழகு பார்க்க இருந்தார். ஆனால் எனக்கு அதுவெல்லாம் தேவையில்லை என்று ஒதுங்கிவிட்டார் சசிகலா. அவர் நினைத்திருந்தால் அதைப் பெற்றுக் கொண்டு அப்போதே அரசியலுக்கு வந்திருக்கலாம். ஆனால் ஜெயலலிதாவின் உடல் நலனில் மட்டுமே அவர் அக்கறை செலுத்தி வந்தார். கயல் சீரியலில் எப்படி கயல் இருக்கிறாரோ அது போன்று தான் சின்னம்மா சசிகலா. தமிழகம் முழுவதிலும் இருந்து 2500 க்கும் மேற்பட்ட இயக்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் சசிகலாவோடு இணைய உள்ளனர் என்று அவர் கூறியிருந்தார். மேலும் இதனை கண்டு சசிகலாவும் சற்று அழுக சில நேரம் விழா மேடையை அமைதியானது.

Spread the love

Related Posts

விநாயகர் கோவில் கட்டிய முஸ்லீம் | கர்நாடகாவில் தொடரும் ஹிஜாப் பிரச்சனைக்கு நடுவில் இப்படியொரு சம்பவம்

கர்நாடக மாநிலத்தில் விநாயகருக்கு கோயில் கட்டிய முஸ்லிம் சமுதயதைத்தை சேர்ந்தவர். பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.

திருமாவளவன் பெயரில் மோசடி… குவியும் புகார்கள்

சமூகவலைத்தளங்களில் திருமாவளவன் பெயரில் போலி கணக்குகள் தொடங்கி அவதூறு பரப்புகிறார்கள் இதனை கண்டறிந்து அவர்களை கைது

விஜயகாந்திற்கு கால் விரல் எடுத்துட்டோம் | பரபரப்பு அறிக்கையை வெளியிட்ட தேமுதிக | அதிர்ச்சியில் ரசிகர்கள்

நீரழிவு நோயால் பாதிக்கப்பட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு மருத்துவர்கள் ஆலோசனைப்படி வலது கையில் உள்ள விரல்களை