நாங்கள் தான் தற்போது எதிர்க்கட்சி என பிரேமலதா பேட்டியளித்துள்ளார்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தேமுதிகவுடன் இணைந்து தேர்தலை சந்திக்காததால்தான் அதிமுக தனது ஆட்சியை இழந்தது. அதனால் உண்மையான எதிர்க்கட்சி தேமுதிக தான் என்றார்.

மேலும் பேசிய அவர் கேப்டன் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரனுக்கு கட்சி பொறுப்பை வழங்குவது குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் முடிவு எடுப்பார் என்று கூறியுள்ளார்.
