விரலி மலையில் ஊராட்சி மன்ற தலைவராக இருக்கும் மனைவிக்கு பதிலாக முக்கிய கோப்புகளில் கணவர் கையெழுத்திடும் வீடியோ வெளியாகி வைரலாகை உள்ளது.
புதுக்கோட்டை மாவட்ட விராலிமலை அடுத்து வடுக்கபட்டி என்கிற ஊராட்சியில் தலைவராக இருப்பவர் தான் ஜெயலட்சுமி. இவருடைய கணவர் திமுக பிரமுகராக இருப்பவர். 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஊராட்சி தலைவராக ஜெயலட்சுமி போட்டியிட்டு வெற்றியும் பெற்றார்.

ஆனால் அப்போதிலிருந்து. அவரது கணவர் மனைவியும் மற்றும் தலைவருமான ஜெயலக்ஷ்மியை அலுவல் பணிகளையும் பார்ப்பதற்காக எதற்கும் கூப்பிடுவதில்லை என புகார் எழுந்த வண்ணம் இருந்தது. தற்போது அதை உண்மை என நிரூபிக்கும் வகையில் அவரது கணவர் சில முக்கிய கோப்புகளில் கையெழுத்திடும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
பரோட்டா சாப்பிட்டதால் இறந்து போன லாரி கிளீனர் | காரணம் என்ன
மேலும் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் அந்த கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் புகார் கொடுத்துள்ளனர்.
