22 வயதான தலித் பெண்ணை திமுக நிர்வாகிகள் உட்பட 8 பேர் கூட்டு பலாத்காரம் | பொள்ளாச்சி சம்பவம் போல அடுத்த நிகழ்வு

விருதுநகர் மாவட்டத்தில் 22 வயதான தலித் பெண்ணை திமுக நிர்வாகிகள் இரண்டு பேர் உட்பட 8 பேர் கூட்டு பலாத்காரம் செய்துள்ள பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இது பொள்ளாச்சியில் நடைபெற்ற கூட்டு பலாத்கார சம்பவத்தை நினைவு கூறும் வகையில் உள்ளது என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இவர்கள் மேல் தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் வலியுறுத்தி வருகின்றனர்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கு போன்று ஒரு சம்பவம் தமிழகத்தில் விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. 22 வயது தலித் பெண் பலாத்காரம் செய்யப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு தள்ளப்பட்டுள்ளார். இது அந்த பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கூட்டு பலாத்காரத்தில் இரண்டு திமுக நிர்வாகிகளுடன் நான்கு பள்ளி மாணவர்களும் இருப்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகார் மனுவின் அடிப்படையில் அந்த சம்பந்தப்பட்ட 8 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கும் முக்கிய நபர் திமுக பிரமுகரான ஹரிஹரன் என்பது தெரியவந்ததும். இவர் இதற்க்கு முன்பு பல பெண்களை காதல் வலையில் விழ வைத்து, பாலியல் தொந்தரவு தந்ததாகவும் தெரியவந்துள்ளது. அதன் அடிப்படையில் தான் 22 வயதான அந்த தலித் பெண்ணையும் அதே போல் இவர் வலையில் விழவைத்து ஒதுக்குப்புறமாக கொண்டு சென்று உடலுறவு வைத்துக் கொண்டதாகவும், அந்த வீடியோவை நண்பர்களுடன் சேர்ந்து எடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதன் பின்னர் அந்த படத்தை காட்டி அந்தப் பெண்ணை மிரட்டி நண்பர்களுக்கும் அவரை விருந்தாக்கி உள்ளார் என்று போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது. கடந்த இரண்டு மாதங்களாக பல சந்தர்ப்பங்களில் இந்த பெண்ணை அவர்கள் பாலியல் வன்கொடுமை செய்தனர் என்று தெரிவிக்கின்றனர்.

பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர்களை பட்டியலிடப்பட்ட சாதி, பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் சட்டத்தின் கீழ் மற்றும் கற்பழிப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மற்ற அந்த நான்கு சிறுவர்களை மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர் படுத்த உள்ளனர்.

Spread the love

Related Posts

“Cringe சிவாங்கி” என்று சிவாங்கியை கலாய்த்த நெட்டிசன்… கடுப்பாகி சிவாங்கி செய்த காரியம் – என்ன சொன்னார் தெரியுமா ?

ட்விட்டரில் குக்கு வித் கோமாளி ரசிகர் ஒருவர் இன்று கிரிங்ச் (cringe) சிவாங்கி ஷோவில் இல்லை

“படுக்கையறை காட்சியில் நடித்து ரசிகர்களை குஷி படுத்துவேன்” ஓப்பனாக பேசி அதிர்ச்சியை கிளம்பியுள்ள ராஷி கண்ணா

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் ஒரு முன்னணி நடிகையாக இருப்பவர் ராஷி கன்னா. இவர் தமிழில்

“நிர்வாணமா… குனிய வெச்சு கும்மாங்குத்து குத்துறாங்க” | லெட்டர் மூலம் கதறிய நடமாடும் நகை கடை ஹரி நாடார்

பெங்களூருவில் குற்றப்பிரிவு போலீசார் என்னை முழு நிர்வாணப்படுத்தி லத்தியால் அடித்து துன்புறுத்துகின்றனர் என 64 பக்கத்திற்கு