திமுக கவுன்சிலரின் கணவரிடம் கொடுத்த பணத்தை திரும்ப கேட்க வந்த போது அவர்களை வெட்டுவதற்காக துரத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம், தெற்கு தத்தமங்கலத்தை சேர்ந்த திமுக ஒன்றிய கவுன்சிலர் நித்தியாவின் கணவர் தான் வெற்றி செல்வன். இவர் டாஸ்மார்க் பார் ஒன்றை அந்த ஊரிலேயே நடத்தி வருகிறார்.


அப்போது அவருக்கு கடன் கொடுத்த குணசேகரன் மற்றும் அவரது சகோதரர்கள் கொடுத்த பணத்தை அவரிடம் இருந்து திருப்பித்தர கேட்டபோது அவர்களை மிரட்டும் விதமாக கையில் அறிவாளை எடுத்துக்கொண்டு குடிபோதையில் அவர்களை வெட்ட துரத்தும் இந்த வெறி செயல் தற்போது வீடியோவாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதன் பெயரில் இரு தரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் சிறுகானூர் போலீசார் நித்யாவின் கணவர் வெற்றிச்செல்வன் மீது விசாரணையில் ஈடுபட்டு வருகிறது.


திமுக கவுன்சிலரின் கணவர் கையில் அரிவாள் எடுத்து இனொருவரை வெட்டுவதற்காக குடிபோதையில் ஓடுவது அங்கிருப்பவர்களை அதிர்ச்சி குள்ளாகியுள்ளது.
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், தத்தமங்களம் திமுக கவுன்சிலர் நித்யாவின் கணவர் வெற்றி செல்வன் அரிவாளுடன் அராஜகம்!!!!#சர்வாதிகாரி_மாடல் pic.twitter.com/YgZpT4GJOB
— BJP IT&SM Krishnagiri (@KrishnagiriIt) August 11, 2022