எட்டு வழி சாலை போடக்கூடாது என்று திமுக சொல்லவே இல்லை என கூறி தற்போது விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறார் அமைச்சர் எவ வேலு.
அவர் கூறியது என்னவென்றால் :- “திமுக அப்போதைய எதிர்க்கட்சியாக இருந்தபோது சட்டமன்றத்தில் எட்டு வழி சாலை குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் பேசுகையில் “திமுக சாலை போடுவதற்கு எதிரி அல்ல விவசாயிகளை அழைத்து பேசி அவர்களுக்கு என்ன தேவை என்று புரிந்து கொண்டு பிரச்சனையை தீர்த்து விட்டு சாலையை போடுங்கள்” என்று தான் அப்போதே அவர் சொல்லியிருந்தார். சட்டமன்ற குறிப்பை வேண்டுமானாலும் நான் எடுத்துக்காட்டுகிறேன்.
வேற்றுகிரக மனிதர்கள் இருக்கிறார்களா ? பகீர் ரிப்போர்ட்

எட்டு வழி சாலை போடக்கூடாது என்று எந்த காலத்திலும் திமுக சொல்லவே கிடையாது என திட்டவட்டமாக அவர் கூறியிருக்கிறார். இதற்கு தற்போது இவர் மீது பலரும் கண்டனங்களை வைத்து வருகின்றனர். மேலும் பரந்தூரில் இரண்டாவது விமான நிலையம் கட்டுவதற்கு நிலம் கையகப்படுத்தப்படும் விஷயத்தைப் பற்றி பேசிய அவர் விவசாயிகளை வஞ்சிக்கும் நோக்கம் எதுவும் அரசுக்கு இல்லை. விமான நிலையத்திற்கு இடங்களை வழங்குவோர் மன நிறைவு பெறும் அளவுக்கு முடிந்த அளவு அனைத்து உதவியும் செய்வோம்,
நிலம் கொடுப்பவர்கள் எல்லோருக்கும் மூன்றரை மடங்கு இழப்பீடு தொகை வழங்கப்படும் என்றும் வீட்டில் ஒருவருக்கு தகுதிக்கேற்ப வேலை கொடுக்கப்படும்” என்றும் கூறியிருக்கிறார்.
