கடந்த அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டம் தான் இந்த சேலம் எட்டு வழி சாலை திட்டம். இந்த திட்டத்தினை அப்போது திமுக உள்பட பல எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இதனால் நீதிமன்றத்தையும் நாடியது, பல போராட்டங்களையும் கையில் எடுத்தது. இந்த சேலம் எட்டு வழி சாலை திட்டத்தில் அரசு நிலம் கையகப்படுத்தும் வேலையில் சில விவசாய நிலங்களும் அதில் அழிந்து போகும்.
அதனால் இதை கருத்தில் கொண்டு அன்றைய எதிர்கட்சியான திமுக இதை எதிர்த்து. மேலும் மேற்கு மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வர பல வழிகள் இருந்தாலும் முக்கியமாக தேனி, கோவை, ஈரோடு, கரூர், திருப்பூர் போன்ற மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வர சேலத்தை தான் நாடு இருக்கவேண்டி இருக்கிறது.
சேலத்திலிருந்து சென்னைக்கு வர எட்டு மணி நேரம் ஆகிறது இதை குறைக்கத்தான் இந்த எட்டு வழி சாலை திட்டம் கொண்டுவரப்பட்டது. கடந்த அதிமுக ஆட்சியின்போது இந்த திட்டம் செயல்படக் கூடாது என விவசாயிகளும் சில சுற்றுச்சூழல் பாதுகாவலர்களும் போராட்டம் நடத்தினர். இருப்பினும் சுற்றுச்சூழல் அமைப்பிலிருந்து இந்த திட்டத்திற்கு அனுமதி வாங்கி திட்டத்தை தொடர உச்சநீதிமன்றம் அன்றைய அதிமுக அரசுக்கு சாதகமாக தீர்ப்பை வழங்கியது.

இதைத்தொடர்ந்து லோக்சபாவில் மத்திய போக்குவரத்து தரைவழி திட்டம் வருகிற 2025 ஆம் ஆண்டு முடிகிறது அதனால் வேறு வழியில்லாமல் திமுக இந்த திட்டத்திற்கு சரி என தலையாட்டிருக்கிறது.
இந்த எட்டு வழி சாலை திட்டம், சேலம் டு சென்னை விரைவு சாலை திட்டமாக பெயர் மாற்ற பட்டு ஏமாற்றுகிறது திமுக என சமூக வலைத்தளங்களில் திமுக அரசை வசை பாடி வருகின்றனர்.
திமுக ஆட்சிக்கு வந்து இவ்வளவு மாதங்கள் இந்த எட்டு வழி சாலை திட்டத்தில் மௌனம் காத்திருந்த வேளையில், தற்போது அந்த திட்டத்தை தொடங்க செயல்பட்டிருப்பது அங்கிருக்கும் விவசாய மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. போன ஆட்சியில் எதிர்ப்பு தெரிவித்து திமுக தற்போது இதை எதிர்க்காமல் அவர்களுக்கு சாதகமாக செயல்பட்டதால் விவசாயிகளும் சமூக ஆர்வலர்களும் தற்போது திமுக அரசை எதிர்த்து போராடி வருகின்றனர்.
