இந்து கடவுளை அவமதிப்பது போல் ஒரு போட்டோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளார் திமுகவின் ஐடி செக்ரட்டரி டிஆர்பி ராஜா.

சாவர்க்கர் பறவையின் மேல் அமர்ந்து சென்றார் என சர்ச்சைக்கு உள்ளான வகையில் பாட புத்தகத்தில் இடம் பெற்றிருப்பதாக ஒரு குற்றச்சாட்டு இருந்தது. இது தொடர்பாக பல மீம்ஸ்கள் வந்தது. எப்படி ஒரு மனிதனால் பறவையில் பயணிக்க முடியும் கொஞ்சம் கூட லாஜிக்கே இல்லை என பாஜகவினரை சவர்க்கரை வைத்து கலாய்த்து வந்தனர். தற்போது இந்த வேலையை திமுகவின் ஐடி செக்ரட்டரி டிஆர்பி ராஜாவும் செய்திருக்கிறார் என்பது போல ஒரு போட்டோ இணையதளத்தில் பரவி வருகிறது.

அதாவது அவர் பறவையில் பார்ப்பது போலும் அவரின் கால்களை ஒரு இந்து கடவுள் பிடித்திருப்பது போலும் அந்த புகைப்படம் இருக்கிறது. அந்த புகைப்படத்தை வடிவேலு வெர்ஷன் என எழுத்துக்களை போட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார் டிஆர்பி ராஜா. இதனை கண்ட சில பிஜேபியினர் தங்களது இந்து மத கடவுள்களை அவமதிக்கிறார் என கூறிவந்தனர்.
இதனால் உடனே அந்த டீவீட்டை டெலிட் செய்தார் டிஆர்பி ராஜா. இருந்தாலும் அதை போட்டோ எடுத்து வைத்து இதற்காக இவர் மன்னிப்பு கேட்க வேண்டும் எங்களது மத நம்பிக்கைகளை புண்படுத்தி விட்டார் என பாஜகவினர் கண்டனங்களை எழுப்பி வருகின்றனர். இது தொடர்பாக பாஜகவின் தமிழக செக்கரட்டரி SG சூர்யாவும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். திமுகவினருக்கு ஏன் இந்த வேண்டாத வேலை என பலரும் தற்போது இவரை கேள்வி எழுப்பி வருகின்றனர்.
