நாமக்கல் மாவட்டத்தில் பெண் ஒருவர் இலவச பயணச்சீட்டை தொலைத்ததால் 100 ரூபாய் அபராதம் கேட்ட டிக்கெட் பரிசோதகரின் வீடியோ இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் கொண்டு வந்த திட்டம் தான் நகர பேருந்துகளில் மகளிர்களுக்கு இலவச பயண திட்டம். ஆனாலும் ஒரு சில இடங்களில் இலவசமாக பயணம் செய்யும் பெண்களை ஏளனமாக பேசுவதும், மீன் விற்கும் பெண்களை பேருந்தில் ஏற்றாமல் இருப்பதும், நரிக்குறவர்களை ஏற்றாமல் இருப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து வீடியோவும் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதன் பிறகு இது போன்ற செயல்களில் ஈடுபடும் நடத்துனர் ஓட்டுனர் மீது துரை ரீதியான நடவடிக்கைகள் எச்சரிக்கை விடுத்ததிருந்தனர். தற்போது இந்த நிலையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே பயணச்சீட்டு பரிசோதகர்கள் அரசு பேருந்துகளை நிறுத்தி பயணச்சீட்டை சோதித்து வந்தனர். அப்போது ஒரு பெண் பயணி ஒருவர் தான் வாங்கிய இலவச பயணச்சீட்டை தொலைத்து விட்டார். டிக்கெட் பரிசோதகர் 100 ரூபாய் அபராதம் கட்ட வேண்டும் என கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த அங்கிருந்த ஒருவர் உடனே செல்போனில் இதுகுறித்து வீடியோ எடுக்க தொடங்கினர்.


இலவச பயணம் தானே ? அந்த டிக்கெட்டை தொலைத்தால் ஏன் 100 ரூபாய் அபராதம் கேட்கிறீர்கள் இதற்கு என்ன சம்பந்தம் என வீடியோ எடுத்து அந்த டிக்கெட் பரிசோதகரை கேள்வி கேட்கிறார். அதனால் சில நேரம் திக்கு முக்காடும் அந்த பரிசோதகர் என்ன சொல்வது என்று தெரியாமல் ஏதோ சொல்லி மழுப்புகிறார். ஆனால் நாம் நன்கு யோசித்துப் பார்த்தால் தெரியும். கொடுப்பதே இலவச பயணச்சீட்டு அதை தொலைத்து விட்டால் எதற்காக 100 ரூபாய் கட்ட வேண்டும் என்று யோசனை நமக்கே வருகிறது. அந்த ஒரு சிறிய யோசனை டிக்கெட் பரிசோதகருக்கு இல்லையா ? என பலர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
மேலும் இந்த வீடியோவை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களையும் டேக் செய்து பதிவிடுகின்றனர். இதுதான் திராவிட மாடல் விடியல் ஆட்சியா என கேள்வி எழுப்பி வருகின்றனர். இலவச பயணச்சீட்டு தொலைத்துவிட்ட பெண்ணிற்கு நூறு ரூபாய் அபராதம் கேட்டு இந்த சம்பவம் பரபரப்புடான் சேர்ந்து ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழக அரசின் இலவச பெண்கள் பேருந்து செல்லலும் பேருந்தில் இலவச டிக்கெட் ஒரு பெண் தொலைத்து விட்டார் அதற்கு 100 ரூபாய் பைன் போடுவேன் என்று பேருந்து பரிசோதகர் அந்தப் பெண்ணிடம் வாக்குவாதம் செய்கிறார். #இலவசபேருந்துபயணமும்நூறுரூபாய்பைனும். pic.twitter.com/PMLnsab0Nf
— Dharma (@Dharmaselva11) August 1, 2022